ஸ்ரீ சாரதா மந்திர்

07

1982 ம் ஆண்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு மஹா சன்னிதானம் மும்பைக்கு விஜய யாத்திரை வந்தபோது செம்பூர் ஜூனா மந்திரில் தான் தினமும் சந்திரமௌளீஸ்வர பூஜை செய்தார். மக்களின் நலனிற்காக பல விசேஷ பூஜைகளும் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கூடியதால் அதுவே சிருங்கேரி சாரதா வித்யா கேந்திரம்  உருவாவதற்கு வழி வகுத்தது. இதன் மூலமாக மும்பையில் ஜூனா மந்திர் அமைந்துள்ள பகுதியில் சிருங்கேரி ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகளின் அனுக்கிரகத்தோடும் அறிவுரையோடும் திட்டமிட்டு ஸ்ரீ சாரதா மந்திர் திருக்கோயில் கட்டப்பட்டது.

இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலில் காணப்படும் கறுப்பு நிறக் கிரானைட் அஞ்ஞானத்தையும் உள்ளே கூடத்தில் உள்ள சிவப்பு நிற கிரானைட் சாத்வீகத்தையும் பளிங்கு நிற வெண்கல் சன்னிதிகள் தெய்வீகத்தையும் பிரதிபலிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலில் நுழைந்தவுடனேயே அஞ்ஞானம்  நீங்கி கூடத்தில் சாத்வீகத் தன்மை பெற்று அன்னை சாரதாம்பாள் கணபதி ஆதிசங்கரர் ஆகியோர் சன்னதிகளில் தெய்வீகப் பரவச நிலை எய்துவதாக மஹாசுவாமிகளே மூன்று நிறத்திற்கும் விளக்கம் கூறியுள்ளார்கள்.Sharadamba_Temple

தலைவாயிலை அடுத்து விசாலமான கூடம் அமைந்துள்ளது. தூண்களே இல்லாத இந்தக் கூடத்தின் சிவப்பு கிரானைட் கற்களால் இழைக்கப்பட்டுள்ளது. இதன் கோடியில் பளிங்கு வெண்கல் மேடை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே அன்னை சாரதாம்பால் சிருங்கேரி திருத்தலத்தில் இருப்பது போலவே தாமரை மலரில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறாள். பக்தர்களை அருள்பாலிக்கும் சாரதாதேவியின் ஒரு பக்கத்தில் மராத்திய மண்ணின் முதற் கடவுளான கணபதியும் மற்றொரு பக்கத்தில் சாரதா தர்மத்துக்குப் புத்துயிர் அளித்த ஆதிசங்கரரும் காட்சியளிக்கின்றனர்.

பிரம்மாண்ட பிரார்த்தனை கூட்டத்தில் ஆன்மிகப் பேருரைகள் பஜனைகள் நடைபெறுகின்றன. கீழ்த்தளம் பொதுமக்களின் நலனிற்காக சடங்குகள் நடத்த பயன்படுகிறது.  கோயிலின் மேல் தளத்தில் ஆன்மிகப் புத்தககங்கள் அடங்கிய பெரிய நூலகம் இயங்கி வருகிறது. இங்கு வேதம் உப நிடதம் சமஸ்கிருதம் கற்றுத்தரும் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s