ஆஹா தகவல்

lyreஆஸ்திரேலியாவில் கிழக்குப் பகுதியில் காணப்படும் ஒரு வினோத பறவை இனம் லயர் பேர்டு [ LYRE BIRD ]  இந்தப் பறவையின் வால் பகுதி  லயர் எனும் இசைக்கருவி போல அமைந்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதன் வாலில் 16 இறகுகள் உள்ளன.  இதில் 12 இறகுகள் பட்டு இழைபோல பளபளப்பாக இருக்கும். 2 இறகுகள் அகலமாகவும் மற்ற இரு இறகுகள் கம்பி போல கனத்தும் இருக்கும். தவிர இதற்கு மிமிக்ரி செய்யும் ஆற்றலும்  உண்டு. பல்வேறு உயிரினங்களைப் போல குரல் எழுப்பி ஆச்சர்யப்படவைக்கிறது. அதில் மனிதச் சிரிப்பொலியும் அடக்கம்.Cute-Dog-Tongue-Out-Post-for-face-lick

நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டே அலைவதைப் பார்க்கலாம். காரணம் நாய்களுக்கு தோலில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. அதன் வியர்வை நாக்கின் மூலமாகவே உமிழ் நீராக வெளியேறுகிறது. இதனால்தான் வெயில் காலத்தில் நாய்கள் உடல் வெப்ப நிலையை ஒரே சீராக வைக்க நாக்கைத் தொங்கப்ப்போடுகின்றன.download

இத்தாலியில் சவோனா என்ற பகுதியில் கடலுக்கு அடியில் விவசாயம் செய்யும் முயற்சியை துவக்கியுள்ளனர். கூண்டுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்குள் பூண்டு  கறிவேப்பிலை பீன்ஸ் ஸ்ட்ராபெஃரி போன்றவற்றை பயிரிடுகின்றனர். இத்திட்டத்திற்கு  நெமோ கார்டன் என்று பெயரிட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை சுற்றுச்சூழல் மாசு மண்வளம் பாதிப்பு போன்ற பிரச்னைகளால் விவசாயம் செய்வதற்கான மாற்று வழியாக இத்திட்டம் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டு விரைவில் விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கிறார்கள் இத்தாலிய அதிகாரிகள்.Siddhar_1 (1)

கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் போகர் என்ற சித்தர்.  பழனியில் இருக்கும்  நவபாஷாண முருகன் சிலையைச் செய்தவர் இவர்..   இவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நூலில் 1700  1800 ஆம் பாடலில் விமானத் தொழில் நுட்பத்தைக் குறித்தும் அதை எப்படி செய்யவேண்டும் என்பதையும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 1926 ம் பாடலில் நீராவி இஞ்சின் வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பல் வடிவமைப்பையும் குறிப்பிட்டிருக்கிறார்.train3

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது பழமொழி.  இதன் உட்பொருள்    ஆ நெய் பசுவின் நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக உணவில் சேர்க்கவேண்டும். பின் அளவை குறைக்கவேண்டும். பூ நெய்  அதாவது பூவிலிருந்து எடுக்கும் தேன். நாற்பது வயதுக்கு மேல் தாராளமாக சேர்க்க வேண்டும். .  தேன் எளிதில் ஜீரணமாகும்   மருத்துவகுணமும் நிறைந்தது. நாற்பது வய்து வரை ஆ நெய்யையும்  நாற்பது வயதுக்கு மேல் பூ நெய்யையும் சாப்பிட  நலமுடனும்  நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s