ஆஹா ஆலயம்

T_500_597

நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சி நாதஸ்வாமி கோயிலில் எமதர்மனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் எம பயத்திலிருந்து விடுபடலாம். என்ற நம்பிக்கை உள்ளது.  அர்ச்சனை செய்த பொருட்களை இல்லத்திற்கு திரும்ப எடுத்துச் செல்வது இல்லை. அத்துடன் இக்கோயில் ராகு கேது பரிகாரஸ்தலமாகவும் உள்ளது.  ஊழ்வினைகளைத் தவிர்த்திட பரிகாரத்தலமாகவும் உள்ளது.images

திருக்கோயில்களில் மூலவருக்கோ/ உற்சவ மூர்த்திக்களுக்கோ பலவிதமான அபிஷேகங்கள் செய்வதை பக்தர்கள் நேரிடையாகப் பார்க்கலாம். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அபிஷேகங்கல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால் அபிஷேகம் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம் என்பதே நியதி.

Girjabandh Hanuman Temple.
Girjabandh Hanuman Temple.

ஸ்ரீ ராம பக்த அனுமான் இதிகாசங்களில் பிரம்மச்சாரியாக போற்றப்படுகிறார். ஆனால் சத்தீஸ்கர் மானிலத்தில் ரத்தன்பூர் என்னுமிடத்தில் உள்ள தட்சணாமுகி ஆலயத்தில் கன்னிப் பெண்ணாக பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். கன்னிப் பெண் உருவத்துடன் ஆஞ்சனேயர் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ சீதா தேவியை தம் தோள்களில் சுமக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் வேண்டியது வேண்டியபடி நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.download

சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளையும் ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம். சைவர்களுக்குரிய திருவாதிரையும் வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே   இங்குள்ள மூலவர் நடராஜரே உற்சவராக வீதிவலம் வருவது சிறப்பு.16406875292_fc9422531a_b

சீர்காழியிலிருந்து டவுன் பஸ்ஸில் திரு நாங்கூர் செல்லலாம். திரு நாங்கூரில் ஏழு கோயில்கல் உள்ளன. தை அமாவாசை அன்று போனால் ஏழு பெருமாளையும் தரிசிக்கலாம். தை அமாவாசைக்கு மறு நாள் 11 கருடசேவை நடைபெறும்.  அதையும் தரிசிக்கலாம். அந்த ஏழு திவ்ய தேசங்கள் திரு அரிமேய விண்ணகரம். திருவண் புருஷோத்தமம் திரு செம்பொன் செய்கோயில் திரு மணிமாடக் கோயில் திருவைகுந்த விண்ணகரம் திருத்தெற்றியம்பலம் திருமணிக்கூடம்.ஷிவா

ஒரே நாளில் ஒரே ஊரில் ஏழு திவ்ய தேச பெருமாளைத் தரிசிக்க முடியும். என்பது அதிசயம்தானே.  இவ்வளவு அருகருகே ஏழு திவ்யதேசமும் காண்பது வேறெங்கும் இல்லை. திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகில் 500 படிகளுடன் அமைந்த மலைக்கோயில் திரு ஈங்கோய் நாதர் மலை ஆலயம். அகத்தியர் ஈ வடிவில் சென்று வழிபட்ட தலம் இது.  மாசி சிவராத்திரியின் போது 3 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி பட்டு லிங்கம் நிறம் மாறிக் காட்சியளிப்பது விசேஷம். ஸ்தல விருட்சம் புளிய மரமாக இருந்த போதிலும் சுந்தரர் இட்ட சாபத்தினால் இங்கு புளிய மரம் கிடையாது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி விமானத்தில் வீணை தட்சிணாமூர்த்தி  கால்களை மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி என குருபகவானின் வித்தியாசமான வடிவங்களைக் காணலாம். மாசி மாத கிருத்திகை நட்சித்திர நாள்     குமார கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s