ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திர்

Mahalaxmi-temple-1மும்பையில் பல செல்வந்தர்கள் பிரபலங்கள் வாழும் பெட்டர் ரோட்டிற்கு அருகில் பூலாபாய் தேசாய் சாலையை ஒட்டிய கடற்கரையில் ஒரு பாறையில் மஹாலக்ஷ்மி மந்திர் அமைந்துள்ளது. இக்கோயில் 1830 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.mahalaxmi_mata_larg

இக்கோயிலின் முகப்பு மண்டபத்தில் முதன் முதலாக நமக்குக் காணக் கிடைப்பது தீபமாலாக்கள் எனும் தீபஸ்தம்பங்கள்தாம். முகப்பு மண்டபத்தின் நடுவில் உலோகத்தாலான சிங்கத்தின் உருவச் சிலையைக் காணலாம். கர்ப்பக்க்கிரகத்தையும் முகப்பு மண்டபத்தையும் பிரிக்கும் சுவரின் இரு கோடிகளிலும் ருக்மாயி பாண்டுரங்கனும் கணபதியும் மாடக்குழிகளில் காணப்படுகின்றனர்.  ஆலயத்தின் பின்னால் கடலை நோக்கிச் செல்லும் படிகளில் வினாயகப் பெருமானுக்கும் ஆஞ்சனேயருக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலின் பின்பக்கத்திலுள்ள கற்பாறைகளில் உட்கார்ந்து சுற்றிலும் உள்ள இயற்கையை ரசிப்பதே சுகமான அனுபவம்தான்.hqdefault

கர்ப்பகிரகத்திலுள்ள இடுப்பளவிலான மஹாலக்ஷ்மி மகா காளி  மகா சரஸ்வதி விக்கிரங்கள் சுமார் இரண்டரை அடி உயரம் கொண்டவை. அவர்களின் திருமுகங்கள் தங்கக் கவசம் பொருத்தப்பட்டு ஒளிவீசுகின்றன.  கிரீடங்களில் விலையுயர்ந்த கற்கல் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வேலைப்பாடும் ஒன்றிற்கொன்று மாறுபட்டுள்ளன. குறுகிய பரப்பளவுள்ள கர்ப்பகிரகத்திற்குள் பக்தர்கள் சென்று தேவியர்களைப் பூஜிக்கலாம்.  மாலைகள் தேங்காய்கள் பழங்கள் இனிப்பு வகைகள் தேவியர்களுக்குக் காணிக்கைகளாக்கப்படுகின்றன.  செந்தூரமும்  குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

இக்கோயிலில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. இங்கு தசரா பண்டிகை பத்து நாட்கள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மும்பை மாநகரில் அதிக வருவாய் உள்ள கோயிலாகத் திகழ்வது மஹாலக்ஷ்மி மந்திர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s