உனக்குள் ஒருவன்

ST_20150804140551455879

ஒரு காட்டில் இருந்ட பர்ணசாலையில் வசித்த எலி தனக்குத் தேவையான உணவை அங்கேயே சாப்பிட்டுக் கொழுத்தது.  ஆனால் அங்கிருந்த பூனையைக் கண்டு பயந்தது. ஒரு முனிவரிடம் சென்று “ எலியாய் இருப்பதால் தானே வெளி உலகத்திற்குச் செல்ல பயப்படுகிறேன். என்னையும் பூனையாக்கினால் தைரியமாக உலவி வருவேனே “ என்றது.

எலியைப் பூனையாக்கினார். முனிவர் பூனையாக மாறிய எலி மகிழ்ச்சியில் திளைத்தது.  ஆனால் அந்த பர்ணசாலையில் நாய் இருப்பதை மறந்தே போய்விட்டது. நாய் பூனையை விரட்டியடித்தது. முனிவரிடம் தஞ்சம் அடைந்த பூனை ‘ முனிவரே என்னையும் நாயாக்கி விடுங்கள். பூனையாக இருந்தால் நாய் துரத்துகிறதே ‘ என்றது. முனிவரும் பூனையை நாயாக மாற்றினார்.

ஒரு நாள் காட்டுக்குள் சென்ற நாய் அங்கிருந்த சிறுத்தையை கண்டு மிரண்டு ஓடியது. முனிவரிடம் தன்னை சிறுத்தையாக்கும் படி வேண்டியது. முனிவரும் அப்படியே செய்தார். சிறுத்தை சிங்கத்தைக் கண்டு அஞ்சியது.  எனவே முனிவரிடம் வேண்டி சிங்கமாகவும் தன்னை மாற்றிக்கொண்டது.

இதன்பிறகு தன்னிலும் பலமிக்க சிங்கங்களை இந்த முனிவர் படைத்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தது. அதனால் முனிவரையே கொன்று விடும் முடிவுடன் பர்ணசாலைக்கு வந்தது. அதன் எண்ணத்தை அறிந்த முனிவர் மீண்டும் அதை எலியாக்கி விட்டார்.  “ எலியே உனக்குள் ஒருவனாக ஒளிந்திருக்கும் மனமே உன் உண்மையான எதிரி இதை புரிந்து கொள்ளாததால் தான் உனக்கு எதிரிகள் இருப்பதாக எண்ணி நிம்மதியன்றி தவிக்கிறாய் “ என்று அறிவுறுத்தி அனுப்பினான். அவரவர் நிலையை தக்க  வைத்தாலே போதும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்

Advertisements

3 thoughts on “உனக்குள் ஒருவன்

  1. “உனக்குள் ஒருவனாக ஒளிந்திருக்கும் மனமே உன் உண்மையான எதிரி. இதைப் புரிந்து கொள்ளாததால் தான் உனக்கு எதிரிகள் இருப்பதாக எண்ணி நிம்மதியன்றி தவிக்கிறாய்!” என்ற வழிகாட்டல் நம்மாளுங்களுக்கும் நன்றே பொருந்தும்.

    உள்ளம் (மனம்) போகிற போக்கில் போகாமல், கொஞ்சம் உள்ளத்தில் (மனத்தில்) எழும் எண்ணங்களை நமது சூழலுக்கு ஏற்ப எடைபோட்டு; எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற முடிவை எடுத்துச் செயற்பட்டால் வெற்றி உறுதி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s