மன நிம்மதி

IMG_4831

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாய் இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் இருந்தன. அவை அடிக்கடி வேலி தான்டி சென்ரு விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி  அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து  “ அப்பா உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள் அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.  காயப்படுத்துகின்றன் “ என்றான்.  வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவில்லை.  செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது. ஒரு முறை நாய்கள் இதே போல் வேலி தானி வந்து பட்டிக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளை கடித்துக்குதறின.arti

 

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று  மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி . வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன்  “ இதோ பார் ஆட்டை துரத்துவது கடிக்கிறது இதெல்லாம் வேட்டை நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் ‘ என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த் விவசாய் வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூரி அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.136040-425x282-huntingdogs

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகனை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாய் காப்பாற்றி இருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.  விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர்” என்னால் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை கண்டித்து அபராதம் விதித்து அவன் நாய்களைக் கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால் நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும்.  உனக்கு அது சொந்தவீடு. அவனுக்கும் அது சொந்தவீடு. இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தை தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பது விருப்பமா/’ என்று கேட்டார்.

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாகப் பார்ப்பதில் தான் எனக்கு விருப்பம் என்றான்.  சரி    …………… உன் ஆண்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன் கேட்பாயா?” என்றார்/

“ நீங்கல் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” என்றான் விவசாயி. அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவனிடம் சொன்னார்.  வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டுக்குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்து சென்று வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டியை விளையாட பரிசளித்தான்.  குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கல் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.pal-clipart

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுகாக்க தற்போது வேட்டைக்காரன் நாய்களை சங்கிலியால் கட்டிப்போட வேண்டியதாயிற்று.  யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் கட்டி வைத்தான்.

தனது மகன் களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகளை பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினான். காட்டிலிருந்து கொண்டுவந்த அரிய சில பொருட்களை பரிசளித்தான். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பதுதான். பிரச்னை தான் வேறு வேறு.  நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது. ஆடுகள் முக்கியம் தான்   ஆனால் அதைவிட மன நிம்மதி முக்கியமல்லவா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s