கர்நாடகாவின் கலைக்கோவில்

 

தலவரலாறு100_1759

அன்னை பார்வதி பம்பா தேவி என்ற பெயரில் பூமியில் பிறந்தவள். இத்தலத்தில் தவமிருந்து சிவனைக் கணவராக அடைந்தாள். அரக்கர்களை வெல்வதற்காக வீரம் மிக்க ஆண் குழந்தையை பெற்றாள்.  பம்பாதேவியை மணந்த சிவன் இங்கு லிங்க வடிவில் கோயில் கொண்டார். சிவனுக்கு பம்பபதி என்றும் ஊருக்கு பம்ப ஷேத்திரம் என்றும் பெயர் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் ஹம்பி என மாறியது.  பம்பபதி பம்பாதேவி புவனேஸ்வரி ஆகியோர் மூலவர்களாக வீற்றிருக்கின்றனர். நாக வம்சத்தைச் சேர்ந்த காளிதேவர் மற்றும் விஜய நகர மன்னர்களால் கோவில் விரிவுபடுத்தபட்டது.IMG_4831

புவனேஸ்வரி சன்னதி மட்டும் சாளுக்கிய பாணியில் உள்ளது. சன்னதிக்கு எதிரில் ம்காமண்டபம் எனப்படும். ரங்க மண்டபமும் அதையடுத்து அர்த்த மண்டபம் என்னும் சிறிய மண்டபமும் உள்ளது. கலை நயம் மிக்க ரங்கமண்டபம் கிருஷ்ண தேவராயரால் 1510 ல் கட்டப்பட்டது. ஐந்து வாசல்களை கொண்ட இந்த மண்டபத்தின் நடுவில் யாளிகளையும் அதன் காலில் மகர மீன் களையும் சவாரி செய்யும் வீரர்களையும் காணலாம். மேல் கூரையிலுள்ள ஓவியங்களில் அர்ஜூனன் அம்பு எய்வது  தசாவதாரம் திரிபுர சம்கார மூர்த்தி காமதகன மூர்த்தி கல்யாண சுந்தரர் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

துணைக் கோயில்கள்Hampi Karnat

கருவறையை சுற்றி பிரதட்சிண பிரகாரம் உள்ளது. உள்பிரகாரத்தில் முக்தி நரசிம்மர்  பாதேனேஸ்வரர் நவ துர்கா தரகேஸ்வரர்  [ சிவன் மடியில் பார்வதி ] துணைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீணா சரஸ்வதி மகிஷாசுர மர்த்தினி பார்வதி புவனேஸ்வரி சன்னதிகளும் உள்ளன. தெற்கில் லோக பவன தீர்த்தம் என்னும் குளம் உள்ளது.

விருபாட்சர் சிவன்download

ஹம்பியிலுள்ள இன்னொரு சிவாலயம் விருபாட்சர் கோவில் ஆகும். துங்கபத்ரா நதியின் தென் கரையில் உள்ளது. விருபாட்சர் என்பதற்கு முக்கண்ணர் என்று பொருள். ஹேமகூடா குன்றில் இருந்து இந்தக் கோயிலை முழுமையாகப் பார்க்கலாம். 52 உயரமுள்ள ராஜ கோபுரத்தை 1510ல் கிருஷ்ண தேவராயர் புதுப்பித்தார். இரட்டை பிரகாரம் இக்கோவிலின் சிறப்பம்சம். கோவிலின் எதிரேயுள்ள ரத வீதி 732 அடி நீளமும் 10.6 மீ அகலமும் கொண்டது. இதை ஹம்பி பஜார் என்கின்றனர்

கட்டடக் கலைhampi

கோவிலின் வெளி பிரகாரம் மிகப் பெரியது. இதிலுள்ள மண்டபத்தில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபம் சிறிய அளவில் உள்ளது. இதன் நடுவே செல்லும் வடிகால் கால்வாய் வழியாக துங்கபத்ரா ஆற்று நீர் மடப்பள்ளியை அடைந்து வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. இங்குள்ள ராயர் கோபுரம் மூன்று தளங்கள் கொண்டது. கலை ஆர்வலர்கள் இந்த கோயில்களுக்கு சென்ரு வரலாம்.

இருப்பிடம்

பெங்களூரிலிருந்து 325 கிமீ    ஹோஸ்பெட்டிலிருந்து 12 கி மீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s