அவள் எனக்கா மகள் ஆனாள்

download

அஸ்தினாபுரம் அருகிலுள்ள தானேஷ்வரத்தில் அன்னை காமாட்சியின் பக்தரான அச்சுதர் தன் மனைவி நீலாட்சியுடன் வாழ்ந்தார். ஒரு நாள் அச்சுதர் கனவில் தோன்றிய காமாட்சி தனக்கு ஒரு கோவில் கட்டும்படி உத்தரவிட்டாள். அதன்படியே கோவில் அமைத்தார் அவர்.

அச்சுதருக்கு குழந்தை இல்லை. இதற்காக தொடர்ந்து அன்னதானம் செய்தார். இதனால் செல்வம் கரைந்தது. அதே நேரம் காமாட்சி அருளால் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஞானம் என்று பெயரிட்டாள். அவளுக்கு எட்டு வயதாகும்போது ஒரு நாள் வீட்டில் அரிசி இல்லை. வயலுக்குச் சென்ரு மண்ணில் கிடக்கும் தானிய மணிகளைப் பொறுக்கி வந்தார் அச்சுதர். அதை மனைவில்  நீலாட்சியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லிவிட்டு கோவிலுக்குச் சென்றார். கோவிலில் அப்பா அப்பா என்று அழைக்கும் குரல் கேட்டது. குரல் வந்த திசையில் மகள் ஞானம் நின்றாள்.

என்னம்மா இங்கு நிற்கிறே என்று கேட்டார்.ST_20150804140428635334

ஞானம் கண்களைக் கசக்கியபடியே அழுதாள். அப்பா எனக்கு ரொம்ப பசிக்குது என்றாள். கோவில்  மண்டபத்தில் அவளைக் கொஞ்ச நேரம் படுத்திருக்கச் சொல்லிவிட்டு அச்சுதர் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவி களைப்பினால் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமின்றி சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

ஞானத்தை மடியில் போட்டுக்கொண்டு உணவு ஊட்டினார்.  உணவு தீர்ந்தது.  அப்பா வீட்டிற்கு போய் இன்னும் கொஞ்சம் எடுத்துவாருங்கள் என்று மகள் வேண்டினாள். மறுக்க மனமின்றி மீண்டும் வீட்டுக்கு வந்தார். இதற்குள் நீலாட்சி எழுந்துவிட்டாள். அவளிடம் மகளுக்கு உணவு ஊட்டிய விஷயத்தை தெரிவித்ததோடு மேலும் உணவு வேண்டும் என்று கேட்டார்.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நம் மகள் ஞானம் வீட்டில் அல்லவா இருக்கிறாள் பிறகு அங்கு எப்படி பார்த்திருப்பீர்கள் என்றாள் நீலாட்சி/ அறையில் ஞானம் பாயில் படுத்திருப்பதைப் பார்த்தார் அச்சுதர்.  இதென்ன அதிசயம் நான் கண்டது உண்மைதானா என்பதை அறிய கோவிலுக்கு மீண்டும் ஓடினார். அங்கே குழந்தை இல்லை

அப்போது அசரீரியாக ஒலித்த அம்பிகை அச்சுதா நான் காமாட்சி பேசுகிறேன். வறுமையிலும் என்னை மறக்காத உன் கையால் உண்ண வேண்டும் என்பதற்காக நானே உன் பெண் வடிவில் வந்தேன். இனி உன் வாழ்வு நலமாகும். செல்வச் செழிப்புடன் வாழ்ந்து இன்னும் பலருக்கும் அன்னதானம் செய்வாயாக என்று வாழ்த்தினாள். தன் மகள் வடிவில் வந்த அம்பாளை எண்ணி அச்சுதர் ஆனந்த கண்ணீர் பெருக்கினாள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s