ஈஸ்டர் முட்டை தத்துவம்

fbdb37e7b2a13760158506e079a1bf08

இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டராக கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் முட்டைகள் புதுவாழ்வையும் மறு பிறப்பையும் உணர்த்துவதாக மக்களால் நம்பப்பட்டது. அதனால் அவை புனிதமாகவும் கருதப்பட்டன. எனவே இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நாளிலே முட்டைகளைப் பரிசாகக் கொடுப்பது வழக்கத்தில் வந்தது.download

முதன் முதலில் ஈஸ்டர் முட்டைகள் மரத்தினாலும் அபூர்வ வண்ணமயமான கற்களாலும் செய்யப்பட்டன. அதன் பின்னரே சாக்லெட் முட்டைகள் புழக்கத்தில் வந்தன. குழந்தைகள் நன்கு வெந்து கடினமாக்கப்பட்ட முட்டைகளை பெயின்ட் செய்து படங்கள் வரைந்து அலங்கரித்து மகிழ்கிறார்கள். பெற்றோர்கள் சாக்லெட் முட்டைகளை வீட்டினுள்ளோ தோட்டத்திலோ ஒளித்து வைத்துவிட்டுத் தங்கள் குழந்தைகளைத் தேடச்செல்லும் ஈஸ்டர் முட்டை வேட்டை விளையாட்டும் சில நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது. இதே போன்ரு எக் ரோல்ஸ்  எக் டேப்பிங் போன்ற பல விளையாட்டுக்கள் ஈஸ்டரை ஒட்டி பல நாடுகளில் விளையாடப்படுகின்றன. ஈஸ்டர் முட்டைகளை கலர் செய்து அலங்கரிக்கும் பாரம்பரிய பழக்கம் ‘ பைசாங்கா ‘ என்றழைக்கப்படுகிறது. வெள்ளை லில்லி மலர் உயிர்தெழுதலின் சின்னமாகக் கருதப்படுவதால்  அது ஈஸ்டர் சிறப்பு மலராகப் போற்றப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் பண்டிகையின் போது 91.4 பில்லியன் சாக்லெட் முட்டைகளும் 90 மில்லியன் சாக்லெட் முயல்களும் தயாரிக்கப்படுகின்றன்.patterned-easter-eggs

இதுவரை தயாரிக்கப்பட்ட ஈஸ்டர் சாக்லெட் முட்டைகளிலேயே மிக உயரமானது.  2011 ம் ஆண்டில் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைதான் 10.39 மீட்டர் உயரமும். 7200 கிலோ எடையும் கொண்ட இந்த முட்டை ஒரு ஒட்டகச் சிவிங்கியை விட உயரமாகவும் ஒரு யானையின் எடையைவிட அதிகமாகவும் இருந்தது.

2007 ம் வருடம் ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் முட்டை வேட்டையே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது. 9753 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து தேடியது 501000 முட்டைகளை. இது அமெரிக்காவிலுள்ள ஃப்ளோரிடா மானிலத்தில் நடந்தது.

இந்த 2016 ஆம் வருடம் ஈஸ்டர் மார்ச் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது. நீங்கள் எந்த வயதினராய் இருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஈஸ்டர் பண்டிகை என்பது இனிப்புகளும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் மிக முக்கியமான பண்டிகை.

உயிர்த்தெழுங்கள்  புது வாழ்வு பெறுங்கள்

Advertisements

One thought on “ஈஸ்டர் முட்டை தத்துவம்

  1. “உயிர்த்தெழுங்கள் புது வாழ்வு பெறுங்கள்” என்ற கருத்தை வரவேற்கிறேன்.
    அருமையான தகவல் தொகுப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s