ஆஹா ஆலயம்

shivu

குஜராத் மானிலம் கோயொக்கில் பாவ் நகரில் அமைந்துள்ள நிஷ்கலன் மஹாதேவ் ஆலயம் கடலுக்கடியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஐந்து சுயம்பு லிங்கங்கள் உள்ளன. பாண்டவர்கள் போர் முடிந்து கௌரவர்களை வதம் செய்த பாவத்திற்காக இத்தலத்தில் பூஜை செய்ததால் சிவன் தோன்றினார் என்கிறது புராணம். இத்தலத்திலுள்ள கடல் காலை உள்வாங்கிவிடும். மாலை 3 மணியளவில் கடல் அலைகள் மீண்டும் உயர்ந்து கோயில் மூழ்கிவிடுகின்றன. இந்த அதிசயம் தினசரி நிகழ்வாக உள்ளது.PaCCULZL88ebHKdiU-Zptg62453

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது காளஸ்தி நாதர்.  ஞானம்மாள் ஆலயம்.  இக்கோயிலில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தனிச்சிறப்பு. மேலும் இக்கோயிலுள்ள தூண்களில் ராமாயணம் மகாபாரதக் காட்சிகளை செதுக்கியுள்ளார்கள்.  இங்கு ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ராகு கேது தோஷமுள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டால் மூன்று மாதங்களுக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.download (1)

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி என்ற கடற்கரை கிராமத்தில் உள்ள் கப்பல் மாதா ஆலயம். கட்டடக் கலைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இதற்கு செல்வ மாதா ஆலயம் என்ற பெயரும் உண்டு. இதன் கீழே கப்பல் போன்ற அமைப்பும் மேலே விமானம் போன்ற அமைப்பும் இருக்கும். உள்ளே மேரி மாதாவை தரிசிக்கலாம். இது 1974ல்  கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 18 அன்று  ஆலயத் திருவிழா நடைபெறுகிறது. இது போன்ற அமைப்பிலுள்ள ஆலய்ம் வேறெங்கும் காண்பது அரிது.download

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள ஆனந்தமங்கலம் என்ற ஊரில் ஆஞ்சனேயர் நெற்றிக் கண்ணுடன் பத்து கைகளில் ஆயுதம் ஏந்தியபடி காட்சி தருகிறார். ராவண வதத்திற்கு பிறகும் அசுரர்களின் அட்டகாசம் தொடர்ந்ததால் சிவபெருமான் தமது  நெற்றிக் கண்ணை அனுமனுக்குக் கொடுத்து அவர்களை அழித்து வரச்சொன்னதாக தலபுராணம் சொல்கிறது. நெற்றிக்கண்ணுடன் கூடிய ஆஞ்சனேயரை வேறு எங்கும் காண முடியாது.sri-swarnapureeswarar-thenponparappi

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் நகரிலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் அமைந்த அழகிய கிராமம் தொன்பொன்பரப்பி.  சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள ஈசனின் திரு நாமம் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் காந்தத் தன்மை கொண்ட ஒரே கல்லினால் சுமார் ஐந்தரை அடி உயரத்திற்கு விஷ்ணு மற்றும் பிரம்மா பீடங்களின் மீது 16 முகங்களுடன் சோடஷலிங்கமாக அருள்பாலிக்கிறார். உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இணைந்து அருள்புரிவது இங்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.Thothadrinathan

திரு நெல்வேலி மாவட்டம் நாங்கு நேரியில் உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோயில் அமைந்துள்ளது.  1300 வருடம் பழைமையான கோயில் இது. பல அற்புத சிற்பங்கள் உடையது. இந்த க்ஷேத்திரத்தில் ஐந்து நம்பிகள் உள்ளன.  நின்ற நம்பி இருந்த நம்பி கிடந்த நம்பி திருப்பாற்கடல் நம்பி மலைமேல் நம்பி என ஐந்து கோலங்களில் திருமால் வீற்றிருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய திருத்தலம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s