நியூ[ஸ்]மார்ட்

1082097582

கொலம்பியாவைச் சேர்ந்தவர் டயானா பெல்ட்ரன் ஹரோ என்பவர்.  இவர் வண்ணக் காகிதங்களை வைத்தே நிஜப்பறவைகள் போலவே தோற்றம் தரும் அற்புதமான பறவைகளை உருவாக்கிவிடுகிறார். இந்தக் காகிதப் பறவைகளுக்கு வண்ணக் காகிதகங்கள் பசை கத்தரிக்கோல் அபரிதமான கற்பனை இவை மட்டுமே தேவை என்கிறார். மீன்கள் விலங்குகள் பழங்கள் இவற்றை மரத்தில் செதுக்கி உருவாக்கி கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறார்.  காகித பறவைகள் செய்ய ஆரம்பித்த பின் கொலம்பியாவில் வசிக்கும் பறவைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி பின்னர் அவற்றை உருவாக்கத் தேவையான வண்ணக் காகிதங்கள் சேகரிக்கிறார்/ ஒரு பறவையை உருவாக்க 5 முதல் 14 நாட்கள் வரை ஆகுமாம்.2A8604AD

‘ தி ரெவனென்ட் ‘ ஹாலிவுட் படத்தில் நடித்ததற்காக லியார்னாடோ டி கேப்ரியோவுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் வேட்டைக்காகச் செல்லும் க்ளாஸ் ஒரு கரடியால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவன் எப்படிப் போராடி உயிர் பிழைக்கிறான் என்பதுதான் படத்தின் கரு. இதில் சிறப்பாக நடித்திருந்தார் கேப்ரியோ.

Air Chief Marshal Arup Raha takes over as Chief of the Air Staff, in New Delhi on December 31, 2013.

அண்மையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா விமானப்படையில் 1991 ம் ஆண்டு முதல் பெண்கள் விமானி பணிக்காகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகிறார்கள். தற்போது போர் விமானங்களில் பெண் விமானிகளைச் சேர்த்துக்கொள்ள ராணுவ மந்திரி ஒப்புதல் அளித்து இருக்கிறார்.  முதல் பிரிவு பெண் விமானிகள் வருகிற ஜூன் மாதம் 18 ம் தேதி முதல் அவர்களும் போர் விமானங்களை இயக்கும் ஆண் விமானிகள் போல செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.dhinga_gawar_mela_pkg

ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூரில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மாதா திங்கரா கவார் என்ற பெண் கடவுளின் பெயரால் ஒரு விழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.  காவல் துறை உட்பட ஒரு ஆண் கூட அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளாக அதிக பிரபலம் அடைந்து வரும் திங்கரா கவாரில் சரிக்கு சமமாக விதவைகளும் கலந்து கொள்வது வியப்பு.  விழா ஏற்பாடுகளையும் செய்வது  முழுவதும் பெண்களே. இந்தத் திருவிழாவிற்காக திங்கரா மாதாவை சுமார் 20 கிலோ தங்க நகைகளுடன் மிக அழகாக அலங்கரிக்கிறார்கள். நடு நிசியில் துவங்கி விடிய விடிய நடைபெறுகிறது. பெண்கள் உற்சாகமாக ஆடல் பாடல்களில் கலந்து கொள்கிறார்கள்.manoj-kumar-630

திரைத்துறையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டு சாதனை படைத்தவர்களுக்கான மிக உயரிய தாதா பால்கே விருது இந்த ஆண்டு பிரபல இந்தி நடிகரும் இயக்குனருமான மனோஜ்குமாருக்கு வழங்கப்படுகிறது. பத்து லட்ச ரூபாய் பணமும் தங்கத் தாமரையும் கொண்டது இந்த விருது. சுமார் 60 ஆண்டுகளாக திரையில் சாதனை படைத்து வருபவர் இவர். ஹரியாலி அவுர் ராஸ்தா   வோ கௌன் தீ    ரோடி கப்டா அவுர் மக்கான்  கிரந்தி  பூரப் அவுர் பச்சிம் உள்ளிட்ட இவரது பல படங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார்.  ஜெய்கிசான்  ஜெய் ஜவான்  என்ற முழக்கத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் முதலில் இயக்கிய உப்கார் படம் தேசிய விருது பெற்றது. 1992 ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மனோஜ்குமாரின் இயற்பெயர் ஹரிகிருஷ்ணா கிரி கோஷ்வாமி    அவரது தேசப்பற்று காரணமாக ரசிகர்கள் அவரை பாரத்குமார் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s