ஆஹா தகவல்

mothers-day-

அமெரிக்காவின் பிலஃடெல்பியா மானிலத்தைச் சேர்ந்த பெண் அன்னாஜார்விஸ் தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால் அவரது தாயார் நோய்வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்துவிட்டார். தன் அன்னையின் நினைவாக 1907 ஆம் ஆண்டு ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அமெரிக்காவில் அதற்கு 1911 ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின் தான் அமெரிக்காவின் அனைத்து மானிலங்களிலும் அன்னையர்தினம் கொண்டாடப்பட்டது. 1914 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவித்துப் பெருமைப்படுத்தினார். அதன் பின்னர் அகிலமெல்லாம் அன்னையர் தினத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர்.Chen-Siyuan

24 வயது சீனப்பெண் சென் சியூ ஆன் ஒரே  நேரத்தில் இரு கைகளையும் பயன்படுத்தி இரு வேறு மொழிகளை எழுதுவதில் வல்லவர். வலது கையினால் சீன மொழியையும் இடது கையினால் ஆங்கிலமும் ஒரே நேரத்தில் எழுதும் திறமை பெற்றவர்.download

மகாராஷ்டிர மானிலத்திலுள்ள நாக்பூர் என்ற நகரம்தான் இந்திய நாட்டின் மையத்தில் உள்ள நகரமாகும். அதன் நினைவாக நிறுவப்பட்ட உயரமான தூணின் அருகில் Zeromile என்ற அறிவிப்பு உள்ளது. நாட்டின் நடுப்பகுதியில் இருப்பதால் நாலு திசைகளிலும் வாழும் மக்களின் பண்பாடு இங்கு இணைந்து காணப்படுகிறது. இதிகாச காலத்திலிருந்து புகழ்பெற்ற விதர்ப்ப நாட்டில் இந்த ஊர் அமைந்துள்ளது. கண்ணபிரானின் மனைவி ருக்மிணி அகத்தியரின் மனைவி லோபாமுத்ரா நளனின் மனைவி தமயந்தி ஆகியோர் விதர்ப்ப நாட்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.tiaraa-mu

முதன் முதலில் சுடிதார் அணிந்தவர் முகலாய மன்னர் ஔரங்கசீப் மகல் ஜாபர் நிஷா   ஜாபர் நிஷா குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டார்.  சுடிதார் அதற்கு வசதியாக இருந்ததால் அதனை அணிந்தார். குதிரையில் வேகமாகச் செல்லும்போது காற்று முகத்தில் வீசுவதைத் தடுக்க துப்பட்டாவைப் பயன்படுத்தினார். பெண்களுக்கு அந்த உடை சௌகரியமாக இருந்ததால் உலகம் முழுவதும் பரவியது.14128

சுமார் 20 அடி உயரமுள்ள ஒட்டச்சிவங்கியின் கழுத்து 10 அடி நீளம் கொண்டது. இதன் மூளைக்கு புவிஈர்ப்பு விசையை மீறி ரத்தத்தை மூளைக்குக் கொண்டு செல்ல சாதாரண இதயத்தால் முடியாது. எனவே தான் வேறு எந்த விலங்குக்கும் இல்லாத வகையில் ஒட்டகச்சிவிங்கிக்கு பத்து கிலோ எடையில் பிரமாண்ட இதயம் உள்ளது. அது நீண்ட கழுத்தையும் கடந்து மூளைக்கு ரத்தத்தைப் பாய்ச்சி துடிப்புடன் இயங்கச் செய்கிறது.images1

ஏதென்ஸ் என்ற பழமையான நகருக்கு இணையான நகரம் மதுரை என்பதைக் காட்டும் வகையில் ஏதென்ச் ஆஃப் த ஈஸ்ட் என மதுரை அழைக்கப்படுகிறது. கடம்ப மரங்கள் அதிகமாக இருந்ததால் கடம்பவனம் என்ற பெயரும் உண்டு. மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவனின் தலைமுடியில் இருந்து மது கடம்பவனத்தில் சிந்தியது. இந்தக் காட்சியை தொடர்ந்து கடம்பவனம் என்பது மதுராபுரி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மதுரை ஆனது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s