ஆஹா டிப்ஸ்

health-sittarathai

வறட்டு இருமலால் தூக்கம் கெடுகிறதா?  சிறு துண்டு சித்தரத்தையை தட்டி வாடாத இளம் வெற்றிலையில் வைத்து பீடா போல் மடித்து வாயில் அடக்கிக்கொண்டு சாறைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குங்கள். வறட்டு இருமல் உடனே நின்று தூக்கமும் நன்றாக வரும். பற்களில் வழுவழுப்பு  துர் நாற்றமும் இருக்காது.download

பிரெட் பன் போன்றவை உலர்ந்துவிட்டால் சிறிது தண்ணீரில் நனைத்து நன்றாக பிசையவும். அதில் நறுக்கிய பச்சைமிளகாய் இஞ்சி வெங்காயம் உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை எண்ணெயில் வடை போல் பொரித்து எடுத்தால் பிரெட் வடை சூப்பர் சுவையுடன் இருக்கும்.1426671344-0014

சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க ஒரு எளிய குறிப்பு  சுண்டைக்காய் வற்றல் உப்பு போடாதது  100 கிராம் வெந்தயம் 100 கிராம்  காய்ந்த வேப்பம்பூ 100 கிராம். இந்த மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கலந்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.vathanarayanan

வாத நாராயணன் கீரை  இதற்கு ஆதி நாராயணன்  வாத மடக்கி  வாதரக்காட்சி  வாதரசு தழுதாழை என பல பெயர்கள் உண்டு.  வாத நோய்களை விரட்டுவதில் வாத நாராயணன் முக்கிய் பங்கு வகிக்கிறது   இதன் இலையை நல்லெண்ணெயில் வதக்கி உளுந்து பூண்டு இஞ்சி கறிவேப்பிலை மல்லித்தழை மிளகாய் உப்பு புளி சேர்த்து துவையலாக அரைத்து வாரம் ஒரு நாள் உணவோடு சேர்த்து சாப்பிடவும்.  சிறிது பேதியாகும் இதனால் மலம் கழிவதோடு வாத நீர் துர் நீர் எல்லாம் வெளியேறுவதால் கால் வலி மூட்டு வலி வாத நோய்கள் விலகும்  வாயுப் பிடிப்பும் போகும்.download (1)

அவரை இலையை அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து முகத்தை அலம்பினால் அம்மை தழும்புகள் விரைவில் மறையும்  பருக்களினால் ஏற்படும் தழும்பு கருமை போக அவரை இலையை அரைத்தும் பூசலாம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s