ஆஹா டிப்ஸ்

black-grapes-1

சத்துணவுகளின் சக்தி இல்லமாக திகழ்வது திராட்சை பழம். இதில் போரான்  வைட்டமின் ஏ சி  பொட்டாஷியம் போன்றவை அதிகமாகவும் கால்ஷியம் சிறிதளவும் உள்ளது. இவை இதயத்தைச் சீராக இயங்க வைக்க உதவுகிறது. இதில் உள்ள ஃப்ளாவோனாயிட்ஸ் என்ற பொருள் கெட்ட கொலாஸ்ட்ரால்  ரத்தக்குழாய்ச் சுவர்களில் படியாமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவை வராமல் இருக்கும்.sabudana_001

ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது வெறும் வாணலியில் ஜவ்வரிசியை நன்றாக பொரித்துக் கொள்ளவும். பிறகு பொரித்த ஜவ்வரிசியைப் பாத்திரத்தில் போட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். குறைந்த நேரத்தில் பாயசம் ரெடி ஆகிவிடும்.murungai18

முருங்கைப்பூ சோற்றுக்கற்றாழை சாறு பசு வெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இவற்றை விழுதாக அரைத்து எலுமிச்சை அளவு காலை மாலை மூன்று நாட்கல் தொடர்ந்து சாப்பிட அதிக நாட்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சீராகி பெரும்பாடு போன்ற  அதிக ரத்தபோக்கும் கட்டுப்படும்.acorus-31

 

வசம்பைத் தட்டி சிறிது நல்லெண்ணெயில் நன்றாக சிவக்க வறுத்தெடுக்கவும். அதைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் கூந்தலை அலசி வந்தால் பொர்டுகுத் தொல்லை முற்றிலும் நீங்கி விடும்.sl467

ரவா இட்லி மற்றும் ஆப்பம் செய்யும்போது சமையல் சோடாவை அப்படியே மாவில் கலப்பதற்கு பதில் ஒரு தம்ளரில் சிறிது தயிர் எடுத்து அதில் சமையல் சோடாவையும் சிறிது சர்க்கரையும் சேர்த்து நுரை வரும்வரை அடிக்கவும். பின் மாவில் கலந்தால் ரவா இட்லி ஆப்பம் நன்றாக உப்பி வருவது மட்டுமில்லாமல் மிருதுவாகவும் இருக்கும்.akhileshpics 1181

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் பி2  இரும்புச்சத்து புரதம் சுண்ணாம்புச்சத்து ஆகிய உடலுக்குத் தேவையான அனேக சத்துக்கள் உள்ளன. சுரைக்காய்க்குப் பித்தத்தைப் போக்கும் தன்னையும் உண்டு. சுரைக்காயை அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி ஒற்றைத்தலைவலி குணமாகும்  சுரைக்காயுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்ப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.

 

Advertisements

One thought on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s