நல்லவன் வாழ வைப்பான்

download

ஒரு ஊருக்கு வந்த துறவி “ நல்லவர்களுடன் மட்டுமே சேருங்கள். ஆன்மிக சொற்பொழிவுகள் பஜனைகளுக்கு சென்று வாருங்கள்   நலமாக இருப்பீர்கள். நான் சொல்லும் இந்த மந்திர வாக்கு உறுதியாகப் பலிக்கும் “ என்று அங்குள்ள மக்களுக்கு போதித்து வந்தார்.

ஒரு வாலிபன் அவரிடம் “ ஐயா சாமி சொல்வது அப்படியே பலிக்கும் என்கிறீர்களே  நீங்கள் என்ன மந்திரவாதியா /” என்று கேலியாக கேட்டான். ‘ அப்படித்தான் வைத்துக்கொள்ளேன் ‘ என்ற துறவியிடம் ‘ அப்படியானால் இந்தக் கல்லை தண்ணீரில் மிதக்கச் செய்ய முடியுமா /” என்று ஒரு பொடிக்கல்லை எடுத்துக்கொடுத்தான்.  துறவி அதை தண்ணீருக்குள் வீசினார். மூழ்கி விட்டது. வாலிபன் சிரித்தான். “ தம்பி அவசரப்படாதே இது சிறிய கல். பெரிய கல்லை நான் மிதக்க வைப்பேன்  ஒரு மணி நேரம் கழித்து வா கல் மிதக்கும் “ என்றார்   வாலிபன் போய்விட்டான்.

துறவி ஒரு மரப்பலகையை எடுத்தார். அதன் மேல் பெரிய பாறாங்கல்லை வைத்து தண்ணீரில் போட்டார். கட்டை மீதிருந்த கல் மிதந்தது. வாலிபன் வந்தான். இந்தக் காட்சியைப் பார்த்து சிரித்தான். ‘ கட்டை மீது கல்லை வைத்து கட்டினால் மிதக்கும் என்பது நான் அறியாததா “ என்றான் ஏளனமாக.

“ தம்பி இதில் கல்லை தீயது என்றும் கட்டையை நல்லது என்றும் வைத்துக்கொள். நல்லவர்களை சார்ந்திருக்கும் தீயவர்கள் கூட அழிவதில்லை புரிகிறதா ?” என்றார். நல்லவர்களுடன் சேர்ந்தால் கெட்டவர்களும் நலம் பெறுவர்……. புரிகிறதா/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s