ஆஹா தகவல்

baby-snake-egg

முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் ஊர்வன [ பாம்பு பல்லி ஓணான் ] பறப்பன [ குருவி காகம் ] போன்றவைகள் முட்டைகளை அடைக்காத்து குஞ்சு பொரிக்கும். ஆனால் பாம்பு மட்டும் முட்டைகளை அடை காக்காது. இவை குளிர் இரத்தப்பிராணிகள். அதாவது சூழ்னிலை வெப்பத்திற்குத் தக்கவாறு தன் உடல் வெப்ப நிலையை மாற்றிக்கொள்ளும். பறவைகள் மற்றும் கோழிகள் தம் முட்டைகளை உடல் வெப்பத்தின் மூலம் அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் பாம்பின் முட்டையில் உள்ள கரு சூழ்னிலை வெப்பத்திலேயே வளர்ச்சி பெற்று முட்டையை விட்டு வெளிவரும்.Amerigo_vespucci_1976_nyc_aufgetakelt

உலகில் முதன் முதலில் கப்பலைக் கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள். கடலில் பயணம் செய்வது எப்படி காற்று எந்தத் திசையில் எந்த நாட்களில் எப்படி வீசும் காற்றின் திசைகளைக் கொண்டு  எப்படிப் பயணம் செய்வது எல்லாம் தமிழன் கண்டுபிடித்தவை. உலகில் மிகப்பெரிய  கப்பலையும் கப்பல் படையையும் வைத்திருந்தவன் இராஜ ராஜ சோழனும் அவனுடைய மகன் இராஜேந்திர சோழனும்தான். தென் பசிபிக் மஹா கடலில்  ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் மிகப்பெரிய சரக்குக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் 2500 ஆண்டுகள் பழைமையானது என்றும் எழுத்துக்களை வைத்து அது தமிழர்களுடையது என்றும் தெரிவித்தனர்.download

கொசு நம்மைக் கடிக்க உட்காருவதற்கு முன் நமது உடலின் தட்பவெப்ப நிலை ரத்த ஓட்டம் ஆகியவற்றை அறிந்து சரியான இடத்தை தேர்வு செய்து அமர்கிறது. பிறகு நமது உடலில் ஊசி போன்ற உறுப்பினால் துளையிடுகிறது  பின்னர் வாயிலுள்ள சூழல் அமைப்பின் மூலம் ரத்தத்தை உறிஞ்சுகிறது. அப்பொழுது கடித்த இடத்தில் லாக்டிக் அமிலத்தைச் சுரக்கிறது. இது ரத்தம் உறையாமல் இருக்கவும் சீராக உறிஞ்சப்படுவதற்கும் உதவுகிறது.main-qi

கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசு ஜி கே மூப்பனார், வேதாத்ரி மகரிஷி, தஞ்சாவூர் பாலசரஸ்வதி , நாதஸ்வர சக்ரவர்த்தி டி என் ராஜரத்தினம், ப ஜீவானந்தம், திருவள்ளுவர், குமரகுருபரர், ஜெ யூ போப், சி சுப்பிரமணியம், ஓமந்தூர் இராமசாமி, இம்மானுவேல், சேகரனார், வள்ளல் பச்சையப்பர் ஆகியோருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. ஒரே ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்குத் தபால் தலைகள் வெளியிட்டது இதுவே முதல் முறை.sproutedgreengram-1

உடைத்த தானியங்கள்  பயன்படுத்துவதைவிட உடைக்காத முழு தானியங்களை உபயோகித்தால் தான் பலன் அதிகம். இதில் பாசிப் பயறும் கொண்டைக்கடலையும் முக்கியமானவை. இவற்றை எட்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வைத்துவிட்டால் முளை வந்துவிடும். இதில் விட்டமின் சி அதிகம் உள்ளது. எந்தப் பக்குவத்திலாவது முளை தானியங்களைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்லது.Junkar_Service_Cochin

கேரளத்தில் பெரும்பான்மையான மக்கள் போக்குவரத்துக்கு பெரிதும் நம்பியிருப்பது நீர்வழிப் போக்குவரத்துத் துறை நடத்தும் படகுகளைத்தான். 10 ரூபாய் கொடுத்தால் போதும் ஆலப்புழாவில் இருந்து கோட்டயத்துக்கு இயற்கையை ரசித்தபடி பேக் வாட்டரில் மூன்று மணி நேரம் பயணிக்கலாம். தினந்தோறும் 14 படகுத் துறைகளில் இருந்து சுமார் 90 படகுகளில் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். நீர்வழிப் பாதைகள் 1895 கிமீ தூரத்துக்கு விரிந்திருக்கிறது.  நம் ஊர் பஸ் ஸ்டான்ட் போல் படகு ஸ்டேண்ட்கள் உள்ளன. அவற்றை இங்குள்ளவர்கள் போர்ட் ஜெட்டி என்று அழைக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s