மெய் க்கு உகந்த நெய்

images

தரமான அரிசி கொண்டு பதமாக வடித்த சூடான சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான். பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பசு நெய்தான் மிகச் சுத்தமானது. சுத்தமான நெய்யை தயாரிப்பது கடினம். அதனால் தான் நெய்யின் விலை அதிகம்.

நெய்யில் எச் டி எல் என்று சொல்லக்கூடிய  நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது.  அதே சமயம் எல் டி எல் என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பு இல்லை. 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில்  நெய் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. உடலுக்கும் மனதிற்கும் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்கக்கூடிய ஓர் அற்புதப் பொருள் நெய்.ghee_039

பால் பொருட்களில்  நெய்யை மட்டுமே அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும். நெய்யை திரவத்தங்கம் [  liquid gold ]  என்று அழைக்கிறார்கள். திருமண விசேஷங்கள் முக்கிய விருந்துகள் கோயில் சம்பந்தப்பட்ட பூஜைகள் அபிஷேகங்கள் யாகங்கள் போன்றவற்றில் முதலிடம் வகிப்பது நெய்யே.  தற்போது இந்தியாவில் பெரும்பான்மையான கோயில்களில் நெய் தீப ஆரத்தியே ஸ்வாமிக்கு உகந்ததாகக் காட்டப்படுகிறது.

நெய்க்கு மருத்துவ குணங்கள் பல உண்டு. நெய்யைச் சில துளிகல் மூக்கினுள் தடவினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். உதட்டு வெடிப்பிற்கும் தீக்காயங்களுக்கும் சிறந்த நிவாரணி நெய் என்ற  ஆயின்ட்மென்ட்தான். நெய்யும் சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் தொண்டை வலி சரியாகும். சூடான பாலில் சில துளி நெய் மிளகு பொடி சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் நின்றுவிடும்.

நம் உடலிலுள்ள திசுக்களுக்குத் தேவையான சத்துக்களை நெய் உணவிலிருந்து எடுத்துச் செல்கிறது. மூளை வளர்ச்சிக்கும் ஞாபகசக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு உணவில் தினமும் அரை டீஸ்பூன் நெய் சேர்ப்பது நல்ல பலனைத் தரும். காய்கறி உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பக்கபலமாக இருப்பது நெய் தான்.ghee

ஜீரணச் சக்தியை எளிதாக்குவதும் நெய்தான். சமையலறையில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களில் முதல் இடம் பெறுகிறது நெய்  இரண்டாம் இடத்தில் இருப்பது மிளகு. மிளகை நெய் விட்டு வறுத்துச் சாப்பிட்டால் பகைவனைக் கூட வெல்ல முடியும்.

மூலிகை மருந்துகள் லேகியம் சூரணம்  நாட்டு மருந்துகள் பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம் என எல்லாவற்றிலும் பயன்படுவது நெய்யே   கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உடலில் ஏற்படும் புண் காயங்கள் போன்றவை விரைவில் குணமாவத்தற்கும் சிறந்த நண்பன் நெய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s