ஆஹா ஆலயம்

Nellaiappar-Temple

வேதசர்மா என்ற சிவபக்தர் தான் பிச்சை எடுத்து வந்த நெல்லை வெயிலில் காயப் போட்டுவிட்டு நதியில் நீராடச் சென்றுவிட்டார். திரும்பும்போது மழை பெய்து எங்கும் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் வேதசர்மாவின் நெல் மீது மட்டும் வெய்யில் அடித்துக்கொண்டிருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்தார். நெல் நனையாமல் வேலி போல் காத்த உமது பெயர் நெல் வேலி நாதர் என உலமெல்லாம் பரவட்டும் என்று வேண்டினார். அன்று முதல் வேணுவனம் திரு நெல்வேலி ஆனது. நெல்லை பாதுகாத்த ஈசன் நெல்லையப்பன் என அழைக்கப்படுகிறார்.Arthanareeswarar02

ஈரோட்டுக்கு அருகாமையில் உள்ள திருஞ்செங்கோட்டில் அமைந்துள்ள மலைக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு சிவன்  ஒரே கல்லில் அர்த்த நாரீஸ்வரராக அருள் பாலிக்கிறார். இக்கோயிலுக்கு 1 கிமீ தொலைவிலுள்ள மலையில் ஐந்து தலை நாகம் கொண்ட நாகம் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

களத்திர தோஷம் ராகு கேது தோஷம் கால சர்ப்ப தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகி திருமணங்கள் நடக்கவும் குழந்தைப்பேற்றுக்காகவும் இங்கு பரிகாரப் பூஜைகள் செய்யப்படுகின்றன. கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே திருமணம் முடிவாவது அனுபவத்தில் கண்ட உண்மை.koteswara-temple

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் மூப்பக் கோயில் என்னும் இடத்திலிருந்து வட திசையில்  இரண்டு கிமீ தூரத்தில் ஏரகரம் என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரில் உள்ள அழகிய சிறு கோயிலில் கந்த நாத சுவாமி சங்கரன் நாயகி அம்மன் சகிதம் சுவாமி நாத பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். இவ்விடத்தில் பாலமுருகப் பெருமாள் தன் தந்தைக்கு ஓம் நமசிவாய உபதேசம் செய்ததாக ஐதீகம். இத்திருக்கோயில் சுவாமிமலை திருக்கோயிலுக்கு முன்னர் கட்டப்பட்டதாக வரலாறு.kuranga

காஞ்சிபுரத்திலிருந்து தூசி என்ற கிராமத்தின் அருகில் உள்ளது. குரங்கணில் முட்டம் சிவன் வாலீஸ்வர பெருமான் அம்பிகை இறையார் வளையம்மை என்ற பெயரில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நுழைவாயில் தூணில் குரங்கு  அணில் முட்டம் லிங்கத்தைப் பூஜிப்பது போன்ற புடைப்புச் சிற்ப உருவங்கள் உள்ளன. அங்குள்ள குளத்தைக் காகம் உருவாக்கியதால் காக்கை தீர்த்தம் காக்கை மடு என்ரு குறிப்பிட்டப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய ஆலயம்.parikkal

விழுப்புரம் மாவட்டம் அருகே பரிக்கல் பூவரசங்குப்பம் அபிஷேகப்பாக்கம் என்ற மூன்று  ஊர்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இவ்வூர்களில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்களை ஸ்வாதி நட்சத்திரன்று ஒரே நாளில் தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது நிசர்சனமான உண்மை.home2

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜஸ்வாமி திருக்கோயிலில் தியாகராஜ ஸ்வாமிக்கும் சுந்தரமூர்த்தி நாயன்மார்க்கும் இடையில் அமைந்த பஞ்சலோக நந்தி  நின்ற கோலத்தில் சுவாமி எப்போது தன்னை வாகனத்திற்கு அழைப்பாரோ என்ற தயார் நிலையில் உள்ளது. நவக்கிரஹங்கள் ஓரே  நேர்க்கோட்டில் ஒரே வரிசையாக அமைந்துள்ளதும் இங்கு தான் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். இதில் ஒருவர் எம சண்டிகேஸ்வரர் எனப்படுகிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s