நியூ[ஸ்] மார்ட்

Evenin

ஒற்றைத் தந்தி வயலினான இம்ஸத் என்ற இசைக் கருவியை வாசிக்கும் திறன் தென் அல்ஜீரியாவின் டுவாரஜ் பழங்குடிப் பெண்களுக்கு மட்டுமே உண்டு. சுரைக்காய் ஓடு மீது மிருகத் தோலைப் பதித்து குதிரை முடியைச் சரடாக நெய்து இந்த இசைக் கருவியைத் தயாரிப்ப்பவர்களும் தாய்வழிச் சமூகமாக வாழும் இந்தப் பெண்களே. ஆனால் நவீன தாள வாத்தியங்களின் வருகையால் இரண்டு பெண்களைத் தவிர யாருக்கும் இப்போது இதை வாசிக்கத் தேரியாது. அடுத்த தலை முறை பெண் குழந்தைகளுக்கு இம்ஸத்தை வாசிக்கப் பயிற்றுவிப்பதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார்கல் இவர்கள்.Karthika

அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சர்வ தேச கணித ஒலிம்பியாட் போட்டியில் தரமணியில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மூன்றாவது படிக்கும் கார்த்திகா ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.  உலகம் முழுக்க இருந்து பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கலில் கார்த்திகாவும் ஒருவர். இவரது கணிதத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியர்கள் இந்திய கூட்டுறவு கற்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்புப் பயிற்சி அளித்திருக்கின்றனர். கார்த்திகாவின் தந்தை ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார் அம்மா இல்லத்தரசி.download

இங்கிலாந்தில் நகரும் தேவாலயம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மெர்சி பஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தேவாலயம். ஏழை எளிய மக்களை  நாடிச் சென்று பிரார்த்தனைகல் நடத்துகிறது. ஆசீர்வாதங்களை வழங்குகிறது. பாவமன்னிப்புகளை அளிக்கிறது. நகரும் தேவலாயத்துக்கான திட்டத்தை உருவாக்கியவர் ஃபாதர் ஃப்ரான்கி மல்க்ரூ என்பவர் அர்ஜெண்டினாவில் ஏழைகள் வாழும் இடங்கலில் போப் திறந்தவெளியில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார். அப்போது தோன்றியதுதான் இந்த யோசனை என்கிறார் அவர்.actor-dhanush

பிரபல ப்ரெஞ்ச் நாவலான THE EXTRA ORDINARY JOURNEY OF THE FAKIR WHO GOT TRAPPED IN AN IKEA CUPBOARD  திரைப்படமாக உருவாகப் போகிறது. அப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.  இப்படத்தை இயக்குபவர் மர்ஜானே சத்ரபி என்ற பெயர் கொண்ட ஈரான் மற்றும் ஃபிரெஞ்ச் பட இயக்குனர்  இப்படத்தில் தனுஷ் பாத்திரத்தின் காட்சிகல் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் இத்தாலி மொரோகோ மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.Srikanth-Srinivasan

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நெல்லையை பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பகவத்கீதை மீது சத்தியப் பிரமாணம் எடுத்து பதவி ஏற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிய முதல் இந்தியன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவிலேயே படிப்பை முடித்து கீழ் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத்த  தொடங்கி தற்போது அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நீதிமன்றமான கொலம்பியா சர்க்யூட் மேல்முறையூட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தில் முதன்மை துணை    சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியவர்.download (1)

ஒலி ஒளி ரேடியோ அலைகளைப் போல ஈர்ப்பு அலைகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் சூரியனை போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அவை தங்கள் வாழ் நாளின் இறுதியில் கருந்துளைகளாக மாறுகின்றன. அவை ஒன்றையொன்ரு சுற்றிப் பிணையும்போது ஈர்ப்பலைகள் வெளியாகின்றன. சுமார் 130 கோடி ஒளி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனைப் போன்று 29  மற்றும் 36 மடங்கு பெரிய ராட்ச கருந்துளைகள் ஒன்றை ஒன்ரு சுற்றிப் பிணைந்தபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகள் அண்மையில் பூமியை வந்தடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஈர்ப்பலைகளை கண்டறியும்   LIGO  [ Laser Interferometer Gravitational & Wave Observatory ] ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன. இதற்காக உலகம் முழுவதும் 1000 விஞ்ஞானிகள்  ஒன்றிணைந்து பணியாற்றினர். இதில் 60 பேர் இந்தியர்கள். இதேபோன்ற அதி நவீன ஆய்வு மையம் இந்தியாவில் ரூ 1000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.  இது இந்திய விண்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s