எளிமையாக எங்கும் வாழலாம்

ST_164434000000

தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம் வைகுண்டம் சத்தியலோகம் ஆனந்த லோகம்  சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான். விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளை செய்தார். பரப்பு பெரியது என்பதால் சில ஆண்டுகள் கடந்த பின்னும் பணி இழுத்தக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையே வேலை பாதியில் நின்றது.  இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த  நேரத்தில் நாரதர் வந்தார்.

“ நாரதரே பிரச்னை இப்படி ‘ என்று ஆரம்பித்த இந்திரன் மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி இதற்கு தீர்வு சொல்லுங்களேன் ‘ என்றார் வருத்தத்துடன்.  ‘ அப்பா எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு’ எனச்சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

அந்த நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள். அவரது தலையில் ஒரு பாய் நீட்டி கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார். ‘ முனிவரே தலையில் என்ன பாய் ?” என்றான் இந்திரன்.

‘ அப்பனே அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா/” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மடியால் அடித்தது போல இருந்தது.

“ ஆகா ஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி ‘ என்று எண்ணியவன் மாளிகை கட்டுமானப் பணியை நிறுத்தி விட்டான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s