ஒரே தலத்தில் ஐந்து நரசிம்மர்

 

ஒரே தலத்தில் ஐந்து நரசிம்மர்களைத் தரிசித்த பாக்கியம் பெற வேண்டுமானால் ஆந்திர மானிலம் கிருஷ்ணா மாவட்டம் வேதாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு வாருங்கள்.hqdefault

தல வரலாறு

சோமாச்சுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்து நான்கு வேதங்களையும் திருடிக்கொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். இதனால் படைக்கும் தொழிலைச் செய்ய முடியாமல் தவித்த பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டார். பெருமாள் மச்சாவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று சோமாச்சுரனை மீட்டு வந்தார். அந்த வேதங்கள் மனித வடிவில் தோன்றி பெருமாளுக்கு நன்றி தெரிவித்தன.  தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் பெருமாளும் தங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தன. தற்போது அங்கு தங்க இயலாது என்றும் நரசிம்ம அவதார காலத்தில் இரண்யனை அழித்த பிறகு அங்கு வருவதாக பெருமாள் உறுதியளித்தார்.  வேதங்கள் கிருஷ்ணவேணி நதிக்கரையில் இருந்த சாளக் கிராம மலையில் தங்கின. அவர்களைக் கண்ட கிருஷ்ணவேணி தனக்கும் பெருமாள் தரிசனம் வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்தாள். வேதங்களும் கிருஷ்ணவேணியும் சில யுகங்களாகத் தவமிருந்தன. நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் இரண்யனை அழித்த பிறகு அங்கு வந்தார். வேதங்கல் தங்கிய இடத்திற்கு வேதாத்ரி என்று பெயரிட்டு அங்கேயே தங்கினார். அவரது உக்ரம் தாங்க முடியாததாக இருந்தது. எனவே அவரை ஜ்வாலா நரசிம்மர் என்றனர்.  இதன் பிறகு பிரம்மா சத்தியலோகத்தில் இருந்து வேதாத்ரி வந்தார். வேதங்களை தன்னுடன் அழைத்துச் செல்லும்போது கிருஷ்ணவேணி நதியில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராமக்கல்லுடன் திரும்பினார். ஆனால் அந்தக் கல்லில் உக்ரத்தை தாள முடியாமல் மீண்டும் கிருஷ்ணவேணி நதியிலேயே வைத்துவிட்டார்.DSC_0579

பிற்காலத்தில் தசரதருக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த ரிஷ்யசிருங்க முனிவர் வேதாத்ரி வந்தார். அவர் அங்கிருந்த நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில் லட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்தார். இதனால் உக்ர நரசிம்மர் லட்சுமி நரசிம்மராக மாறினார்.  லட்சுமி நரசிம்மரைத் தரிசிக்க கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து வந்தார். அவர் தன்னுடன் நரசிம்மரின் ஒரு வடிவத்தை எடுத்துச் சென்று வேதாத்ரி அருகில் உள்ள ஒரு மலையில் வைத்தார்.  அந்த மலை கருடாத்ரி எனப்படுகிறது. இங்குள்ள நரசிம்மருக்கு வீர நரசிம்மர் என்பது திரு நாமம் ஆக வேதாத்ரியில் ஜ்வாலா நரசிம்மர் வீர நரசிம்மர் சாளக்கிராம நரசிம்மர்  லட்சுமி நரசிம்மர் கருவறையில் யோகானந்த நரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் வீற்றிருக்கின்றனர்.

சிறப்பம்சம்90_big

இந்த நரசிம்மரை வழிபட்டால் கலியுகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கல் அனைத்தும் நீங்கும் என்று வியாசமுனிவர் கூறியிருக்கிறார். இந்த கோயிலுக்கு செல்பவர்கள் முக்தி அடைவர்.  900 ஆண்டுகளுக்கு முன் ரெட்டி மன்னர்கள் தற்போது இருக்கும் கோயிலை கட்டியுள்ளார். புலவர் எர்ர பிரகதா கவிஞர் சர்வ பவ்ம ஸ்ரீ நாதர் வியாக்யகார நாராயண தீர்த்தலு ஆகியோர் இந்த நரசிம்மர் குறித்து பாடியுள்ளனர். ஸ்தோத்திர தண்டகம் காசிக்காண்டம் ஆகிய நூல்களில் இந்த நரசிம்மர் பற்றி கூறப்பட்டிருக்கிறது.

மலைக்கோயில்hqdefault (1)

வேதாத்ரி அடிவாரக்கோயிலில் இருந்து 255 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்று வடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சனேயருக்கும் சுதைசிற்பம் உள்ளது. திருமணம் ஆகாத பெண்கள் இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். நாகர் சிற்பங்களும் உள்ளன. மலையில் இருந்து கிருஷ்ணா நதியின் எழில்மிகு தோற்றத்தைக் காணலாம். நதியில் பாதுகாப்பாக நீராட படித்துறை வசதி செய்யப்பட்டுள்ளது.

உய்யால வழிபாடு

குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக்கொள்கின்றனர்.  உய்யால என்றால் தொட்டில் குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும் செஞ்சு லட்சுமி தாயாரையும் தொட்டிலில் வைத்து ஆட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

சிவன் சன்னதிவல்லாரை-thamil.co_.uk_

நரசிம்மர் கோயிலாக இருந்தாலும் இங்கு சிவனுக்கு சன்னதி உள்ளது. சன்னதி முன்பு தனி கொடிமரம் இருக்கிறது. சிவபெருமானை ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி என்றும் அம்பிகையை பார்வது அம்மவாரு என்றும் அழைக்கின்றனர். விழாக்காலங்களில் உற்சவர் சிவ பார்வதி சிறிய தேரில் பவனி வருகின்றனர். சிவன் முன் நந்தி இருக்கிறார். வீரபத்ரசுவாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு திரு நீறு வழங்கப்படுவதில்லை. தீர்த்தம் தருகின்றனர். சிவபாதம் பொறித்த ஜடாரியும் வைக்கின்றனர்.

இருப்பிடம்

விஜயவாடா ஐதராபாத் ரோட்டில் 60 கிமீ தூரத்தில் சில்லக்க்கலு என்னும் சிறு நகர்ம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் ரோட்டில் 10 கிமீ கடந்தால் வேதாத்ரி.

 

Advertisements

One thought on “ஒரே தலத்தில் ஐந்து நரசிம்மர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s