மங்கலம் அருளும் நரசிம்மர்

hqdefault (1)

அடர்ந்த காடு  ஓடைகளைக் கடந்து மலையில் ஏறி தரிசிக்க வேண்டிய நரசிம்ம மூர்த்தி ஆந்திர மானிலம் குண்டூர் மாவட்டம் கேதவரத்தில் அருள்புரிகிறார்.

தல வரலாறுNarasimhaSwamy

11 ம் நூற்றாண்டில் இப்பகுதியை அண்ட கேதவர்மா என்ற மன்னரின் பெயரால் இவ்வூருக்கு கேதவரம் என்ற பெயர் வந்தது. இவரது பக்கத்து நாட்டை ஆட்சி செய்த யாதவ மன்னர் ஒருவரின் கனவில் நரசிம்மர் தோன்றி கேதவரம் மலையில் ஓரிடத்தில் தான் இருப்பதை உணர்த்தினார். இந்தத் தகவலை கேதவர்மாவுக்கு தெரிவித்தார் யாதவமன்னர்.  கேதவர்மா மலையில் ஏறி சுயம்புவடிவ நரசிம்ம வடிவம் இருப்பதைப் பார்த்தார். உடனடியாக அங்கு கோயில் கட்டினார். அங்கு போதிய இடம் இல்லாததால் அடிவாரத்தில் ஒரு கோயில் கட்டி விழாக்களை நடத்தினார். அடிவாரக்க்கோயிலில் லட்சுமியுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். ஆஞ்சனேயர் சன்னதியும் உள்ளது.

சிறப்பம்சம்hqdefault

காட்டாரம் கேதாரம் என்ற புராணப்பெயர்களும் இவ்வூருக்கு இருந்துள்ளன.  கிருஷ்ணா நதியின் மிக ஆழமான பகுதி இங்குள்ளது. அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஊர் அழிந்துவிட்டது. இப்போது வயல்களும் காடுகளுமாக காட்சியளிக்கிறது.  குறைந்த அளவு மக்களே வசிக்கின்றனர்.  மலைக் கோயிலுக்குச் செல்ல 600 படிகள் ஏற வேண்டும்.  சுயம்பு நரசிம்மரின் உருவம் ஒரு பாறையில் உள்ள இவரது உருவம் தெளிவில்லாமல் இருக்கிறது. தாயாரை செஞ்சுலட்சுமி என்கின்றனர்.  செஞ்சு என்றால் வேடுவச்சி காட்டில் வேடுவர் இனத்தினர் வசித்ததால் தாயாருக்கும் அவர்கள் தங்கள் இனத்தின் பெயரையே சூட்டியுள்ளார்.

வைரக்குளம்Kethavaram_IMG_20150420_092100

இங்கு ஒரு காலத்தில் குளம் ஒன்றை வெட்டினர். அப்போது ஒரு ஊழியரின் காலில் ஏதோ இடித்து ரத்தம் வழிந்தது. இடித்த பாறையை சோதித்ததில் அது வைரப்பாறை எனத் தெரியவந்தது. அந்தப்பகுதியை மேலும் தோண்டியபோது அதனுள் சில சிலைகளும் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எனவே இங்குள்ள நரசிம்மருக்கு வஜ்ராலயர் என்று பெயர் சூட்டினர்.  வஜ்ரம் என்றால் வைரம் என பொருள்.

திறக்கும் நேரம்Kethavaram_IMG_20150420_093936

அடர்ந்த காட்டுப்பகுதியில் இருப்பதால் அடிவாரக் கோயிலை மட்டும் பக்தர்கள் செல்லும்  நேரத்தில் திறக்கின்றனர். கோயில் அருகில் ஒரு குடும்பம் தங்கியுள்ளது.

இருப்பிடம்

குண்டூரில் இருந்து மெச்சர்லா செல்லும் ரோட்டில் 55 கிமீ தூரத்தில் பெலம்கொண்டா என்ற ஊர் வரும்  இங்கிருந்து 25 கிமீ தூரத்தில் கேதவரம் உள்ளது. இதில் 10 கிமீ பாதை மிக மோசமாக இருக்கும். கார்களில் செல்வது நல்லது. இந்தப்பாதையைச் செப்பனிடுவது குறித்து ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்திலுள்ள ஆன்மிக அமைப்புக்கள் கோரிக்கை வைக்கலாம். மெச்சர்லா ரோட்டிலுள்ள சேத்தனப் பள்ளியில் இருந்து பஸ்கள் புளிச்சந்தலாஅ சிட்யால என்ற ஊர்களுக்கு கேதவரம் விலக்குவரை செல்கின்றன. விலக்கில் இருந்து 5 கிமீ நடக்க வேண்டும். இந்தப் பயணம் கொஞ்சம் சிரமமானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s