ஆஹா டிப்ஸ்

maxresdefault

பனீர் பட்டர் மசாலா வீட்டில் தயாரிக்கும்போது இஞ்சி வெங்காய விழுதை நன்றாக வதக்கிய பிறகே மற்ற பொருட்களை வதக்கவேண்டும். கூடுதல் சுவைக்கு முந்திரி கசகசா ஒரு ஸ்பூன் தேங்காய் விழுதை அரைத்துவிட்டால் சுவையும் மணமும் ஹோட்டலைத் தோற்கடிக்கும்.பருக்கள்-வராமல்-தடுக்க

முகத்தில் இருக்கின்ற செபாதியஸ் என்னும் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சீபம் என்னும் எண்ணெய்க் கசிவு முகத்தின் மீது படிவதால் பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை பருக்களாக மாறுகிறது. பரு வந்தால் நகத்தால் கிள்ளக்கூடாது. வேப்பிலை புதினா துளசி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து பருக்களின் மீது பூசி 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் முகம் கழுவுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பருக்கள் போயே போச்சு.1121381839_61bc942391

திரட்டுப்பால் செய்வதற்கு பால் குறைவாக உள்ளதா/ ஒரு முற்றிய தேங்காயைத் துருவி வெண்ணெய் போல் அரைத்து கொள்ளவும். சர்க்கரை போடுகிற பதத்திற்கு பால் சுண்டியதும் அரைத்த விழுது ஏலப்பொடி சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையும் குறையாது அளவும் அதிகமாகும்.download

மின்சாரம் தடைப்பட்டிருக்கும்போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்குப் பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும். மெழுகுவர்த்தி எரியும் போது இரண்டு கல் உப்பைக் குழிவான பகுதியில் வைத்தால் மெழுகு சீக்கிரம் உருகாமல் நின்று எரியும்.images

நாம் சமைத்து முடித்த பிறகு குக்கரின் உட்பகுதி கறை படியும். அந்தக் கறையைப் போக்க இரவு குக்கரைத் தேய்த்த பிறகு அதில் சிறிதளவு புளித்த மோரும் கறை இருக்கும் வரம்பு வரை தண்ணீரும் விட்டு மூடி வைத்தால் காலையில் குக்கர் பளிச்சென்று ஆகிவிடும்.150722002948_mali

புதினா கொத்துமல்லி துவையல் அரைக்கும்போது வறுத்த உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் புளி உப்புடன் ஒரு தக்காளியை அப்படியே பச்சையாகப் போட்டு அரைத்தால் துவையலின் ருசி அபாரமாக இருக்கும். அதில் சிறிது கடுகு பெருங்காயம் தாளித்துக் கொட்ட அதை விட சூப்பராக இருக்கும்.clay-pots-2

புதிதாக மண் பாத்திரம் வாங்கி சாதாரணமாக கழுவிவிட்டு சமைத்தால் உணவில் மண் வாடை வரும்   அதற்கு அந்த மண் பாத்திரத்தின் உட்பகுதியில் எண்ணெய் தடவி அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து இரண்டு மூன்று முறை சூடுபடுத்திவிட்டு மண்பானையைக் கழுவிப் பயன்படுத்தினால் மண் வாசனை உணவில் வராது   விரிசலும் ஏற்படாது.

 

Advertisements

One thought on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s