பஞ்சவடி

Panchamug
36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சனேயரை விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடியில் தரிசிக்கலாம்.
தல வரலாறுPanchamuga
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும் முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இது பற்றிய விவரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சனேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சனேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால் மிகப்பிரம்மாண்டவான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லை கொண்டு பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை உருவாக்கப்பட்டது.
பஞ்சமுகத்திற்கான காரணம்5Mukhi
ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தபோது ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறு நாள் வரும்படி அனுப்பிவிட்டார் ராமர். இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன் மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான்.
இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சனேயரை அனுப்புனார் ராமர். நரசிம்மர் ஹ்யக்கிரீவர் வராகர் கருடன் ஆகியோடை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சனேயருக்கு அந்த தெய்வங்கல் தங்களின் சக்தியை அளித்தனர். இதன் மூலம் ஆஞ்சனேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.
தல சிறப்புdownload
ஜெயமங்கள ஆஞ்சனேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி லட்சுமி கடாட்சம் ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல் ஆன்மிக பலம் வராகரின் அருளால் மனத்துணிவு கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை ஆஞ்சனேயர் அருளால் மன அமைதி சகல சௌபாக்கியம் கிடைக்கும்.
கோவில் அமைப்பு
பன்னிரெண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர் சீதை லட்சுமணன் சத்ருக்கன் பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சனேயருக்கு மேல் 118 அடி உயர் விமானமும் அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் இருக்கிறது. இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கிமீ தூரம் ஒலி கேட்கும்.
பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் கல்Ramnaamcarvedfloatingstone
சீதையை மீட்பதற்காக ராமர் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன் நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவ சிற்பியான விஸ்வகர்மாவின் மஹன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு ‘ என்னைப்ப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான் எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும். ‘ என வரம் கொடுத்தார். இதனால் தான் நளன் தன் தந்தையைப் போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்த கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.
2003ல் என் சித்தப்பாவின் சஷ்டி அப்த பூர்த்திக்கு சென்றபோது இந்தக் கோயிலை குடும்பத்துடன் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

 
இருப்பிடம்              புதுச்சேரி திண்டிவன்ம் வழியில் பத்து கிமீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s