ஸ்ரீ அன்னையைக் கவர்ந்த அற்புத மலர்கள்

mother

நான் பிறந்து வளர்ந்து படித்து வேலை பார்த்தது எல்லாம் அரவிந்தரும் அன்னையும் இருக்கும் பாண்டிச்சேரியில் தான்.  ஆந்திராவில் திருமணம் செய்துகொண்டு வந்து 40 வருடங்கள் ஆனாலும் பாண்டி என்ற சொல் எனக்கு தேனாகத்தான் இனிக்கும். சின்ன வயதில் என் அப்பாவுடன் சைக்கிளில் அமர்ந்து நான் அன்னையின் தரிசனத்திற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போவேன்.  ஆனால் அந்த வயதில் பக்தி தெரியவில்லை.  அங்கு வந்தவர்களையெல்லாம் பார்த்துக்கொண்டு என் அப்பா அன்னையின் தரிசனத்தை முடிக்கும்வரை  நின்று கொண்டிருந்துவிட்டு வந்து விடுவேன்.

அதற்குப் பிறகு அன்னைப்பற்றி படித்து தெரிந்துகொண்ட பிறகு மிகவும் சிறந்த பக்தையாகிவிட்டேன். அதிலும் என் கண்களில் ஒரு கோளாறு வந்து அவரை வேண்டிக்கொண்டு அது சரியானதிலிருந்து என் நம்பிக்கை இன்னும் வேரூன்றியது.

எப்போது பாண்டிச்சேரி போனாலும் என் அன்னையுடன் அரவிந்த அன்னையின் தரிசனமும் செய்து கொண்டுதான் வருகிறேன்..

மரணத்தை வெல்லும் வாடாமல்லிvadamalli

எளிதாகப் பல நிறங்களில் கிடைக்கும் வாடாமல்லி மலரை அடிக்கடி பூஜையில் சமர்ப்பித்து அர்ச்சித்து வந்தால்  மரண பயம் அறவே நீங்கி நாம் அழிவற்றவர்கள் என்ற தெளிவு ஏற்படும். அதனால்தான் அரவிந்த அன்னை வாடாமல்லியை ‘ மரணமின்மை என்ற பூரணம் ‘ என்று அழைக்கிறார்.

திடசித்தம் தரும் ஆர்கிட்purple-orchid-flowers

ஆர்கிட் [ ORCHID ] என்ற மலர் வினோதமான வடிவமைப்புடையது. பலப்பல வண்ணங்களில் பல வகைகளில் கிடைக்கிறது. இதன் செடி மண்ணிலும் மரத்தின் மீதும் வளர்கிறது. இம்மலரைப் பூஜையில் சமர்ப்பித்தால் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை ஏற்படும். சந்தேகமும் சஞ்சலமும் மறையும். இறை புகழ் பாடுவதற்கான எண்ணங்கள் நெஞ்சில் ஊறி ஆனந்தமான வார்த்தைகள் தாமாகவே வாயிலிருந்து வெளிப்படும். ஒவ்வொரு கணமும் இறையருளே நம்மை நடத்திச் செல்லும்படி சரணாகதியாவத/ற்கும் அப்படிப்பட்ட புரட்சி சமுதாயம்  முழுவதிலும் ஏற்படவும் கடவுள் போலவே கடவுளின் சாயலாக நாம் மாறுவதற்கும் திடசித்தம் வேண்டும் என்பார் ஸ்ரீ அரவிந்தர். அந்த திடசித்தத்தைத் தருவது ஆர்கிட் மலர்கள்.

பயம்  நீங்கும் சுண்டைக்காய் மலர்TurkeyBerries

TORVUM என்ற தாவரப் பெயரைக்கொண்ட சுண்டைக்காயின் கொத்துக் கொத்தான வெண் மலர்களை பயமின்மை என்றே அழைக்கிறார் அரவிந்த அன்னை. சுண்டைக்காய் விஷயத்துக்கு கூட பயந்து சாகும் மனிதர்களுக்கு இது உடனே தெரிய வேண்டிய வரப்பிரசாதம். வீட்டில் எப்போதும் பூஜையில் வைக்க வேண்டிய மலர் இது. ‘ எதைக் கண்டும் அஞ்சாமலும் எதற்கும் தளராமலும் இருக்க தைரியத்தை ஏராளமாகத் தருவது இம்மலர் ‘ என்கிறார் அரவிந்த அன்னை.

உணர்வின் தவம் ஊமத்தம்DATURA INOXIA

DATURA என்ற ஊமத்தம் பூ அரவிந்த அன்னையிடம் ‘ உணர்வின் தவம் ‘ என்ற பெயரைப் பெறுகிறது.  ஊமத்தம் விதை கொடிய நஞ்சு என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஊமத்தஞ் செடியின் இலைகளிலிருந்து ஆஸ்துமா முதலிய வியாதிகளுக்கு மருந்து தயாராகிறது. என்பதைச் சிலரே அறிவர். ஆனால் இம்மலர் உணர்வின் தவம். நம் உணர்வனைத்தும் இறையுணர்வாக மாறுவதற்கு உதவும் மலர் என்பது அன்னையின் கண்டுபிடிப்பு இறைவனின் தன்மையை ரசித்து உணர்வை அடைய ஊமத்தம் பூவை பூஜையில் வைப்போம்.

 

இன்று அரவிந்த அன்னையின் பிறந்த நாள்.  அவர் அருளாசி என்றும் நமக்குக் கிடைக்கவேண்டுமென பிரார்த்திப்போம்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s