ஆஹா தகவல்

ICFfirst

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ரயில்  பெட்டிகளை தயாரித்த நிறுவனம் சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலை ஆகும். இதுவரை 50000க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளைத் தயார் செய்துள்ளது. 1955 ம் வருடம் அக்டோபர் 2ம் தேதி ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்டு 60  ஆண்டுகள் கடந்து 500 க்கும் மேற்பட்ட வகையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.  வருடத்திற்கு 350 பெட்டிகள்  தயாரித்து வந்த தொழிற்சாலை இன்று வருடத்திற்கு  2000 பெட்டிகள்  தயாரிக்கிறது.parachutist-

விமானத்திற்கு முன்பே பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது ‘ லூயிஸ் லெனார்மான்ட் ‘ என்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானிதான் பாராசூட்டைக் கண்டுபிடித்தார். தீப்பிடித்த கட்டடனளில் இருந்து தரையில் குதித்து உயிர்காத்துக்கொள்வதற்காகத்தான் இந்த முயற்சியை செய்தார். பின்னாளில் விமானப் பயணிகளுக்கு மிகவும் பயன்பட்டது. பாராசூட் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்துத்தான் விமானம் கண்டு பிடிக்கப்பட்டது.download

திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் ஆத்மநாத சுவாமிக்கு அர்த்தஜாம பூஜையின் போது சுடச்சுட புழுங்கல் அரிசி சாதமும் பாகற்காய்க்குழம்பும் நைவேத்தியம் செய்வர். அப்போது ஆவி உனக்கு அன்னம் எனக்குன்னு சொல்வார்கள். இதைச் சாப்பிட்டால் தீராப் பிணியும் தீரும் என்பது நம்பிக்கை.download (1)

ரோமானியர்கள்தான் முதன் முதலில் வலது புறம் இடது புறம் என காலணிகளைத் தனித்தனியாக உபயோகித்தனர். இதற்கு முன்பு காலணிகள் இரண்டு பாதங்களிலும் வேறுபாடு இன்றி அணியப்பட்டது. காலணி அளவு இங்கிலாந்து அரசர் இரண்டாம் எட்வர்ட் காலத்தில் [ 1324 ம் ஆண்டு ] திட்டமிடப்பட்டது. இப்போதும் அந்த அளவுகள்தான் நடைமுறையில் உள்ளன.kanna

சிலந்திகளால் திடப்பொருள்களை உணவாக உட்கொள்ள முடியாது. தாம் பிடிக்கும் பூச்சிகளின் உடலில் ஒரு வித நஞ்சை செலுத்தி அதை நீர்மயமாக்கி அதன் பின்னரே அவற்றை உறிஞ்சிக்குடிக்கின்றன.250px-Isaac_Pitman

சர் ஐசக் பிட்மன் 1813ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். ஷார்ட் ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்துக் குறியீடுகளைக் கண்டு பிடித்தவர். எனவே சுருக்கெழுத்து முறை இவர் பெயரால் பிட்மன் ஷார்ட் ஹேண்ட் என்று அழைக்கப்படுகிறது. ஸ்டெனோகிராபர்களுக்கு மிகவும் பயன்படும் இந்தச் சுருக்கெழுத்து முறையை 1837ல் அறிமுகப்படுத்தினார்.Pitman_Consonants

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s