உலப்பன்னா

download (1)

கேரள மானிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள திருப்பூணித்துறை பூரணத்திரயேஸ்வரர் கோவிலில் துவாரகை கிருஷ்ணன் கொடுத்த லிங்கத்தை கையில் ஏந்தி பெருமாள் காட்சியளிக்கிறார். இங்கு குழந்தை வரத்துக்காக உலப்பன்னா என்ற வழிபாடு நடக்கிறது.

தல வரலாறுdownload

இப்பகுதியில் வாழ்ந்த அந்தணர் தம்பதிக்கு குழந்தை இல்லை. அந்தணருக்கு பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணு பக்தை.தன் கணவனை மன்னித்து தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மனைவி அவரை வழிபட்டு வந்தான். ஆனால் ஒன்பது குழந்தைகள் பிறந்தும் அவை பிழைக்கவில்லை.

இதையடுத்து அவள் தன் கணவனுடன் துவாரகை சென்றாள். அங்கே கிருஷ்ணனை சந்தித்தார் அந்தணர். ‘ கிருஷ்ணா எனக்கு பல குழந்தைகள் பிறந்தும் இறந்து விட்டன. அவற்றைக்காக்கும் பொறுப்பு பூமியில் வாழும் உனக்கில்லையா”? என்றார்.krishna-hindu-god

கிருஷ்ணன் அருகில் இருந்த அர்ஜூனன் “ அந்தணரே ஒருவர் பிறப்பும் இறப்பும் விதி வசத்தால் ஆனது. இருந்தாலும் கிருஷ்ணராஜவை நீர் தவறாக எண்ணக்கூடாது. எனவே இனிமேல் உமக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்து கொள்கிறேன் அப்படி இறந்தால் நான் அக்னியில்  விழுந்து இறப்பேன் “ என்றான். அந்தணர் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். ஆனால் பத்தாவது குழந்தையும் பிறந்து இறந்து விட்டது.

இதைக் கேள்விப்பட்ட அர்ஜூனன் தீயில் இறங்கத் தயாரானான் கிருஷ்ணர் அவனைத் தடுத்து “ அர்ஜூனா நான் அருகில் இருக்கும் போது “ நீ அந்தணரிடம் குழந்தை பாக்கியம் வேண்டி கிருஷ்ணனை சரணாகதி அடைய வேண்டும் என கூறாமல் பிறக்கும் குழந்தைகளை இறக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆணவத்தால் கூறினாய் எனவே தான் பத்தாவது குழந்தையும் இறந்துவிட்டது “ என்றார்.Painting-Of-Arjuna

இதைக்கேட்ட அர்ஜூனன் தலை   குனிந்தான். ஆனாலும் அவன் தான் ஏற்ற சபதப்படி அக்னியில் விழுந்து வைகுண்டம் சேர்ந்தான். அங்கே மஹாவிஷ்ணு ஒரு லிங்கத்தை கையில் வைத்தபடி தியானத்திலிருந்தார். அர்ஜூனன் “ பகவானே எனது ஆணவம் அழிந்தது. ஆனாலும் அந்தணருக்கு கொடுத்த வாக்கை தாங்கள் காப்பாற்ற வேண்டும் “ என வேண்டினான். மஹாவிஷ்ணு அர்ஜூனனிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து “ நான் பூஜித்து வரும் இந்த லிங்கத்தை அந்தணர் வாழும் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடச் சொல்   இது சந்தான பாக்கியம் தரக்கூடியது ‘ என்றார்.

இந்த தல வரலாற்றின்படி சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் மீது பெருமாள் கையில் லிங்கத்துடன் அமர்ந்திருக்கும் சிலை அமைக்கப்பட்டது. மூலவராக பெருமாள் இருந்தாலும் சிவனுக்குரிய ஈஸ்வரப் பட்டத்தையும் சேர்த்து ‘ பூர்ணத்திரயேஸ்வரர் ‘ என்ற பெயர் சூட்டப்பட்டது.

சிறப்பு486072678Tripunithura_Main

இங்கு கடா விளக்கு என்னும் அணையா விளக்கு இருக்கிறது. மூன்று அடுக்கு கொண்ட இந்த விளக்கை குழந்தை இல்லாதவர்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டை ‘ உலப்பன்னா ‘ என்கின்றனர்

இருப்பிடம்  எர்ணாகுளத்திலிருந்து 12 கிமீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s