ஆஹா பாட்டி வைத்தியம்

vasampu

பச்சிளம் குழந்தைக்கு வயிற்று உப்புசம் ஏற்பட்டால் வசம்பை நெய்யில் பொரித்தெடுத்து உரைகல்லில் தாய்ப்பால் விட்டு உரசி இரண்டு சொட்டு அளவு நாக்கில் வைக்க உணவு எளிதில் செரிக்கும். சூட்டினால் வயிற்று வலி ஏற்பட்டு குழந்தை அழுதால் விளக்கெண்ணெயை வயிற்றில் பூசலாம். உச்சியில் தடவினாலும் சூடு தணியும். குளிர்க்காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் நடுக்கத்தைக் குறைக்க குழந்தையின் உள்ளங்காலில் இரண்டு சொட்டு வேப்பெண்ணெய் தடவலாம். உடலுக்குச் சூடு தரும்.Pepper Jeera Podi

சிறிது மிளகு சீரகம் உப்பு சேர்த்து மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி இந்தப் பொடியைச் சேர்த்து வடித்த சாதத்தையும் அதில் போட்டு பிரட்டி எடுத்து சூடு ஆறுவதற்கு முன் சாப்பிட்டுவிட்டால் அஜீரணம் வயிறு மந்தமாக இருப்பது வயிறு இரைச்சலுடன் மலம் போவது இவை அனைத்தும் விரைவில் குணமடையும்.

OLYMPUS DIGITAL CAMERA

சீதாப்பழம் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் தசை நார்களை வலுவடையச் செய்யும். மூல நோய் குணமாகும். இதயத்தை பலப்படுத்தும். சீதாப்பழக் கூழை கால் வெடிப்புகளில் தடவினால் வெடிப்புகள் மறைந்து பாதம் மிருதுவாகும். சீதாப்பழ விதையை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அலசினால் பேன்கள் ஒழியும்.10-

100 கிராம் வேப்ப எண்ணெயில் இரண்டு மூன்று காய்ந்த மிளகாயை காம்பு இல்லாமல் கிள்ளிப்போட்ட்டு ஒரு துண்டு சுக்கு கல் உப்பு கால் டீஸ்பூன் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டவும். இந்த எண்ணெயை இரவில் மூட்டுப்பகுதியில் வலி வீக்கம் உள்ள இடத்தில் தேய்த்து மறு நாள் வென்னீரில் குளிக்க வீக்கம் குறைந்து மூட்டுவலி நீங்கும்.DSC05263-001

முருங்கை கீரையில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. இதனை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நின்றுவிடும். தலைமுடி அடர்த்தியாக செழித்துவளரும். நரைமுடி அகலும்.   கீரையை வேகவைத்த நீரில் சிறிது உப்பு மிளகுதூள் போட்டு குடித்து வந்தால் உடல்சூடு தணிந்து உடல் வலிமை பெறும்.papaya

மலச்சிக்கலால் அவதிப்பட்டால் பப்பாளிப்பழம் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் போதும். வெங்காயத்தை விளக்கெண்ணையில் வதக்கி சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு போட்டு வேகவைத்து கடைந்து சாப்பிட மலச்சிக்கல் மூல நோய் நீங்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s