கற்பக வினாயகர்

large_115547783

தண்டகாரண்ய வனத்தில் விப்ரதன் என்ற வேடன் இருந்தான். ஒரு சமயம் மழை பெய்யாமல் நீர் நிலைகள் வற்றிப் போயின. வனப்பகுதி வறண்டது. பறவைகளும் விலங்குகளும் உணவு தேடி வேறு இடம் பெயர்ந்துவிட்டன். விப்ரதன் வேட்டையாடுவதற்கு வழியின்ரித் தவித்தான். பசி தாகத்துடன் அலைந்தான். காட்டு வழியில் செல்வோரைத் தடுத்து வழிப்பறி செய்தே சாப்பிடும் நிலைக்கு ஆளானான்.

ஒரு நாள் அந்த வழியாக அந்தணர் ஒருவர் வந்தார். அவரை விப்ரதன் தடுத்த போது அவர் பயந்து ஓடினார். வழியில் ஒரு வினாயகர் கோயில் இருந்தது. அதற்குள் சென்று ஒளிந்து கொண்டார். விப்ரதனும் கோயிலுக்குள் நுழைந்தான். அங்கிருந்த வினாயகர் விப்ரதனின் வாழ்வை மாற்றியமைக்க திருவுள்ளம் கொண்டார்.

விப்ரதன் வினாயகர் சிலையைப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஏனோ கண்ணை எடுக்கவே மனம் வரவில்லை. “ ஆகா இப்படியும் கூட ஒரு தெய்வம் இருக்குமா? ‘ என்று அதன் அழகில் சொக்கி நின்றான். இனம் புரியாத பரவச நிலைக்கு ஆளானான். தன்னை மறந்து அப்படியே தியானத்தில் ஆழ்ந்துவிட்டான். இதற்குள் அந்தணர் தப்பி விட்டார். சிறிது நேரத்தில் கண் விழித்து அவனுக்கு புத்தி மாறியது. மீண்டும் பசிக்கு உணவில்லாமல் வழிப்பறியில் ஈடுபட கிளம்பினான்.

வழியில் முக்காலர் என்ற மகரிஷி தென்பட்டார். அவரை மறித்து தன்னிடம் இருந்த வில்லைக் காட்டி அச்சுறுத்தினான். கலங்காத முனிவர் சிரித்தபடி விப்ரதனை நோக்கினார். அவருடைய பார்வை விப்ரதனை ஈர்த்தது. மீண்டும் உள்ளத்தில் தெளிவு உண்டாக தன்னை மன்னித்து ஆசியளிக்கும்படி வேண்டினான்.

முனிவரும் தன் கையில் இருந்த கமண்டல நீரை விப்ரதன் மீது தெளித்து ஆசீர்வதித்தார். ஒரு காய்ந்த மரக்கிளையை கையில் கொடுத்து மஹாகணப்தி மந்திரத்தை உபதேசித்தார். அதை விடாமல் ஜெபித்து வரும்படி கூறிவிட்டு புறப்பட்டார். விப்ரதனும் நம்பிக்கையுடன் ஜெபித்து வர மந்திர சித்தி பெற்றதன் அடையாளமாக காய்ந்திருந்த மரக்கிளை துளிர் விட்டதோடு வினாயகரைப் போலவே தும்பிக்கை ஒன்றும் அவனது புருவத்தின் மத்தியில் தோன்றியது.TN_120329172832000000

விப்ரதனுக்கு காட்சியளித்த வினாயகர் ‘ பக்தனே புருவ மத்தியில் தும்பிக்கை பெற்ற நீ புருசுண்டி ‘ என பெயர் பெற்று புகழடைவாய். மந்திர ஜெபத்தால் முளைத்த இந்த மரம் கற்பக மரம் என பெயர் பெறும். யார் எதைக்கேட்டாலும் வழங்கும் வல்லமை இதற்கு உண்டாகும். நீயும் யோகம்  ஞான மார்க்கங்களைப் பின்பற்றி என் திருவடியை அடையும் பேறு பெறுவாய் ‘ என வாழ்த்தினார்.

Advertisements

One thought on “கற்பக வினாயகர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s