ஆஹா பாட்டி வைத்தியம்

download (2)

தேங்காயில் சில உயிர்ச்சத்துக்களும் புரதச்சத்தும் கால்சியமும் உள்ளது. இது பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வாய்ப்புண் ஆஸ்துமா வெட்டுப்புண் சூட்டுப்புண் வயிற்றுப்போக்கு சரும வியாதிகள் மலச்சிக்கல் போன்ற நோய்களை விரட்ட வல்லது. இதை அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.download (4)

நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.bo824

அமுக்கிராங்கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்துக் கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப்போட்டு வந்தால் கழுத்துவலி குறையும்.download (3)

கண்டங்கத்திரி செடியை வேருடன் எடுத்துக் காயவைத்து இடித்துப்பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குறையும்.ven pongal

வெண்பொங்கல் செய்யும்போது ஆறியதும் வறட்சியாகிவிடும். ஆறினாலும் மென்மையாக இருக்க பொங்கல் செய்து இறக்கியதும் அரை கப் சூடான பால் அல்லது வென்னீரை ஊற்றி நன்றாக அடித்துக் கிளறி மேலே இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வைத்தால் எப்போது சாப்பிட்டாலும் மென்மையாக இருக்கும்.Pepper Jeera Podi

மிளகு சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்ஹ்டு ஒரு டீஸ்பூன்  நெய்யிலோ அல்லது வெறும் வாணலியிலோ லேசாக வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸ்யில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். புளிச்ச தோசை இட்லி உப்புமா பொங்கல் வடை பூரி போன்றவற்றில் போட வாசனை அபாரமாக இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது.Health-Benefits-Fenugreek-menthulu-Seeds

தேங்காய் லேசாக அழுகியிருந்தால் கூட சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. அந்தத் தேங்காயை வீணாக்காமல் அத்துடன் கசகசா ஒரு டீஸ்பூன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஊறவைத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நவீன வகை ஷாம்பு போட்டுக் குளித்தும் கிடைக்காத  பளபளப்பு தலை முடிக்குக் கிடைக்கும். பொடுகு தொல்லையும் இருக்காது.download (1)

ஆரஞ்சுப் பழத்தோலை வெய்யிலில் காயவைத்து இத்துடன் கஸ்தூரி மஞ்சள் பாதாம் கடலைப்பருப்பு சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளவென்றிருக்கும்.download

வேர்க்கடலையில் உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தும் புரதச் சத்தும் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற நல்ல உணவாகும். இத்ல் இருக்கும் மெக்னீசியம் இன்சுல்லினை சுரக்கச் செய்யும். ஹார்மோனைத் துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும் ரத்த ஓட்டம் சீராகும். முப்பது விதமான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளதால் தினமும் ஐம்பது கிராம் வேர்க்கடலை சாப்பிடவும்.

Advertisements

One thought on “ஆஹா பாட்டி வைத்தியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s