ஆஹா தகவல்

words list_Weekdays

நம் முன்னோர்கள் ஒளியின் அளவைக் கொண்டுதான் கிழமைகளை வரிசைப்படுத்தியுள்ளனர். சனியினும் ஒளிமிக்கது வெள்ளி. வெள்ளியிலும் ஒளிமிக்கது வியாழன். வியாழனினும் ஒளிமிக்கது புதன். புதனினும் ஒளிமிக்கது செவ்வாய். செவ்வாயினும் ஒளிமிக்கது திங்கள். திங்களினும் ஒளி மிக்கது ஞாயிறு. இவ்வாறாக கோள்களின் ஒளியின் அடிப்படையில்தான் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி என கிழமைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.images

சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கி நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. நறுக்கிய உடனேயே சமைத்துவிட வேண்டும். வெங்காயம் காற்றில் உள்ள நச்சுக்கிருமிகளை  தன்னகத்தே ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது. இதனால் காய்ச்சல் சளி இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் அறையில் வெங்காயத்தை நறுக்கி வைத்துவிட்டால் அவர்கள் வெளிவிடும் அசுத்தக் கிருமிகளை வெங்காயம் ஈர்த்துவிடும். நோய் தொற்று ஏற்படாது.murmansk-russia-city-viewPosition-of-the-Earth-around-the-Sun_lightbox

உலகின் ஆர்டிக் வட்டத்தில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள முர்மென்ஸ்க் நகரம். இங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு டிசம்பர் 2ம் தேதி முதல் ஜனவரி 10 ம் தேதி வரி சூரிய உதயம் கிடையாது. இந்த 40 நாட்களை போலார் நைட் என அழைக்கிறார்கள். அதேபோல் மே 22 முதல் ஜூலை 23 வரை சூரியன் மறைவதே இல்லை. இந்த நாட்களை போலார் டே என்று அழைக்கிறார்கள். இங்கு மட்டும்தான் இந்த அதிசயம்  நிகழ்கிறது.newcellphones

செல்போன்களில் பி எஸ் என் எல் , ஏர்செல் ஏர்டெல் போன்றவை GSM [ Global System for Mobile ] தொழில் நுட்பத்தில் இயங்குகின்றன. டாடா இண்டிகாம் ரிலையன்ஸ் இண்டியா மொபைல் போன்றவை   CMDA [ Code Division Multi Access] தொழில் நுட்பத்தில் இயங்குகின்றன  செல்போன் களில் பயன்படும்  SIM Card என்பதன் விரிவாக்கம்   Subscribers identity madule card என்பதாகும்.download

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் ஹெஸ்தன் என்ற அறுவைச் சிகிச்சை நிபுணர் 1914ம் ஆண்டு மார்ச் 27ம் நாள் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். பிரசல்ஸ் நகரில் அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்ட அவர் இரத்தத்தில் சோடியம் சிட்ரேட் கலந்ததும் அது உறையாமல் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதனால் அறுவைச் சிகிச்சை சமயத்தில் ரத்ததானம் கொடுப்பவர் அருகில் இருக்க வேண்டிய  அவசியம் தவிர்க்கப்பட்டது. இதனைக் கொண்டு இரத்தம் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தினார். அதன் பிறகே ரத்ததானம் பெறப்பட்டு சோடியம் சிட்ரேட் கலந்து பாதுகாக்கும் நடைமுறை உருவானது. இவரே இரத்த வங்கியின் முன்னோடி ஆவார்.

Old Faithful
Old Faithful

அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசியப்பூங்காவில் ஓல்டு பெயித்புல் என்ற வெப்ப நீரூற்று இருக்கிறது. இது அறுபத்தைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பயங்கரமாய் பொங்குகிறது. ஒவ்வொரு முறையும் முப்பது முதல் நாற்பது மீட்டர் உயரத்திற்கு வென்னீரை பீச்சுகிறது. இவ்வாறு பொங்கும்போது 45 ஆயிரம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது. 65  நிமிடம் பொங்கியதும் மீண்டும் அமைதியாகிவிடும்.Kodinhi13

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊர் கொடுங்கி. இங்குள்ள மக்கள் தொகையில் 2000 பேரில் 350 இரட்டையர்கள். எனவே கொடுங்கி டுவின் டவுன் என அழைக்கப்படுகிறது. பொதுவாக 1000 பிறப்பிற்கு  6 இரட்டையர்கள் இருந்தாலே இரட்டையர்கள் சதவீதத்தின் உச்சமாகக் கருதப்படும். அலகாபாத் அருகில் முகமத்பூர் உம்ரி கிராமத்திலும் இதே போல் இரட்டையர்கள் அதிகம் உள்ளனர். இங்கு 900 பேருக்கு 60 இரட்டையர்கள் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s