பிரண்டைக்கும் உண்டு நற்குணங்கள்

download (1)

பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறுகொடி இனம். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் இதன் தண்டு வேர் பழம் அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டவை. பிரண்டையில் புரதம் கொழுப்பு நார் பொருள் மாவுப்பொருள் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு ஆகிய சத்துக்கள் உள்ளன். இத்தகைய பிரண்டையை நெய் விட்டு வதக்கு துவையலாகச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டால் வாயுத்தொல்லை மட்டுப்படும். செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறை நீக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும் துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்பு பலம் பெறும்.download

இரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பைக் கரைத்து இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். இதயம்பலப்படும். மலச்சிக்கலை நீக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் முதுகுவலி இடுப்பு வலிக்கு பிரண்டை நல்ல மருந்து.  உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்.

நம் வீட்டிலேயே சிறிய மண் தொட்டிகளில் சிறு பிரண்டை தண்டை ஊன்றி வைத்தாலே நன்றாக வளர்ந்துவிடும்.  பிரண்டை தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும். வேகவைத்த பிரண்டையை மோரில் போட்டு உலர்த்தி வற்றலாக உபயோகிக்கலாம். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் பிரண்டைக்கு ஒரு கெட்ட குணமும் உண்டு. இதன் சாறு உடம்பில் பட்டாலே நமைச்சல் ஏற்படும். எனவே சமைக்கும்போது பச்சை நிறம் பிரவுனாக மாறும் வரை வதக்கவேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s