நியூ[ஸ்]மார்ட்

dow

இங்கிலாந்தில் வசிக்கும் ஜான் கென்னடி ப்ரெளன் என்பவர் உலோகங்களிலிருந்து சிற்பங்களை உருவாக்கும் ஓர் உலோக சிற்பி. தேவையற்ற ஆணி சைக்கிள் சங்கிலி போல்ட் நட் ஹேர்பின் தூக்கி எறியும் உதிரி பாகங்கள் போன்றவற்றை சேகரித்து விதவிதமான பறவைகள் விலங்குகள் பூச்சிகளைச் செய்து காண்போரை பிரமிக்க வைப்பார். பிறகு தேவைக்கு ஏற்ப குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் வெட்டுக்கிளிகளும் மனதைக் கவர்கின்றன.adam star

இலங்கையிலுள்ள ரத்னபுரா சுரங்கத்திலிருந்து சுமார் 1410  எடையுள்ள சஃபையர் எனப்படும் நீலக் கல் கிடைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய இந்த நீலக் கல்லின் மதிப்பு சுமார் ரூ 665 கோடி என்றாலும் 1165 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என்கிறார்கள். ஆதிகாலத்தில் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறிய ஆதாம் இந்த மலைச்சரிவுகளில் வந்து தங்கியிருந்ததாக நம்பப்படுவதால் இதற்கு ஆதாமின் நட்சத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.illayaraja-

கேரள அரசின் ‘  நிகாகந்தி ‘ விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி வழங்கி கௌரவித்தார். கேரள மானில அரசின் சுற்றுலாத் துறை சார்பில் திருவனந்தபுரத்தில் ‘ நிசாகந்தி ‘ நடன இசை விழா இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. அந்த விழாவில் இசை ஞானிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. கேரளாவில் இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.NUA-Robotics-smart-suitcase

இஸ்ரேலைச் சேர்ந்த என் யு ஏ ரோபோடிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் சூட்கேஸை உருவாக்கியிருக்கிறது.  வெளியூர் பயணத்தின்போது முன்பெல்லாம் பெட்டிகளைத் தூக்கி செல்வோம். பின்னர் இழுத்துச்செல்ல வசதியாக பெட்டியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இனி நாம் நடக்கும்போது சூட்கேஸூம் நம்மைப் பின் தொடர்ந்து வரும். இந்த சூட்கேஸில் நவீனத் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது. சமதளமான தரைகளில் கேமரா சென்சார்கள் மூலம் பெட்டி நம்மைப் பின் தொடர்ந்து வரும். யாராவது தொட முயன்றால் அலாரம் அடித்து காட்டிக் கொடுத்துவிடும். சென்சார் நெட்வொர்க் கம்ப்யூட்டர் விஷன் ரோபோடிக்ஸ் தொழில் நுட்பம் மூன்றையும் இணைத்து இந்த சூட்கேஸை உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்மார்ட் போனில் அதற்கான அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு ‘ ஃபாலோ மீ “ என்ற பட்டனை அழுத்தினால் சூட்கேஸ் இயங்க ஆரம்பித்துவிடும். இதில் இன்னும் சில சோதனைகளும் மேம்பாடுகளும் செய்தபின் தான் விற்பனைக்கு வரும் என்கிறார்கள்.new-frog

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிறிய மரத்தவளை இனம் ஒன்று இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு மேல் மரத் தவளைகளில் இவை வசிக்கின்றன. இதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகளாக இவை கண்டு பிடிக்கப்படாமல் இருந்துள்ளன. பெண் தவளைகள் தாங்கள் வசிக்கும் மரப்பொந்தில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தான்  முட்டைகளை இடுகின்றன. அவற்றிலிருந்து தலைப்பிரட்டைகள் எனப்படும் தவளைக் குஞ்சுகள் வெளியானபின் பொரிக்காத முட்டைகளை அவற்றுக்கு உணவாகக் கொடுக்கின்றன. பிற தவளைகளைப் போலில்லாமல் இந்தத் தவளைகள் பெரிதாக வளர்ந்த பிறகும் பூச்சி புழுக்களை உண்பதில்லை. பதிலாக தாவரங்களையே உணவாகக் கொள்கின்றன.download

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜினியா பூவை மலர வைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜினியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும். மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண் ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் இந்த மலர்ச் செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s