வைதீஸ்வரன் கோயில்

v.koil

தல வரலாறு

நவக்கிரங்களில் ஒருவரான அங்காரகன் வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார். நோய் தீர சிவனைச் சரணடைந்தார். சிவன் அசரீரியாக பூலோகத்திலுள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி வழிபட்டால் குணமடையும் என்றார். அந்தக் குளம் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்ததை அறிந்த அங்காரகன் அங்கு வந்து நீராடி சிவனை வணங்கினார். சிவன் அவருக்கு திருச்சாந்து என்னும் மருந்து கொடுத்து குணமடையச் செய்தார்.1

சிவன் அங்காரகனுக்காக மருந்து தயாரித்தபோது அம்பாள் தைல பாத்திரம் அமிர்த சஞ்சீவி வில்வத்தடி மண் ஆகியவை ஏந்தி நின்றாள். இதனால் தைல நாயகி எனப் பெயர் பெற்றாள். இது மருவி தையல் நாயகி ஆனது. வைத்தீஸ்வரன் கோவிலின் புராணப் பெயர்  புள்ளிருக்கு வேளூர்.4b3e4a96-8059-47a3-b43b-ea5160d83737_S_secvpf

புள்  என்றால் பறவை.  இருக்கு  என்றால் ரிக் வேதம்  வேள்  என்றால் முருகன்  ஊர்  என்றால் சூரியன். இவர்கள் எல்லாரும் இங்கு சிவ பூஜை செய்து அருள் பெற்றதால் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

திருச்சாந்து உருண்டைvaitheeswaran_temple

4448 வகையான நோய்களை தீர்த்து வைக்கும் மருத்துவ பீடம் இது. இங்கு புற்றுமண் அபிஷேக தீர்த்தம் வேப்பிலை அபிஷேக சந்தனம் விபூதி இவைகளை கொண்டு ‘ திருச்சாந்து ‘ என்ற மருந்து தயாராகிறது. இதைச் சாப்பிட்டால் நோய்கள் குணமாகும் என்பர். வைத்திய நாதர் தன்னை வணங்குவோரின் பிறவிப்பிணியையும் தீர்த்து வைக்கிறார். இவர் மேற்கு நோக்கி உள்ளார். மேற்கு பார்த்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செல்வ முத்துக்குமாரர்VaitheeswaranKoil

இங்குள்ள முருகன் சிவனுக்கு செல்லப்பிள்ளை என்பதால் செல்வமுத்துக்குமாரர் எனப்படுகிறார். முருகனுக்கு தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையில் புனுகு பச்சைக் கற்பூரம் சந்தனம் எலுமிச்சை பன்னீர் புஷ்பம் பால்சாதம் பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை நடக்கும். இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கே நடத்தப்படுகிறது. முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.

நேர்க்கோட்ட்டில் நவக்கிரகம்G_T9_584

இங்கு நவக்கிரகங்கள் வழக்கமான முறையில் அமைக்கவில்லை. ஒரே  நேர்கோட்டில் வைத்திய நாதருக்கு அடங்கி இருப்பதாக ஐதீகம். நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். கோவிலின் கிழக்கே பைரவர் மேற்கே வீரபத்திரர் தெற்கே வினாயகர் வடக்கே காளி ஆகியோர் காவல் புரிகின்றனர்.செவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்கிறார்.

செவ்வாய் தோஷ விவர்த்திG_T3_584

செவ்வாய் தோஷம் நீங்க அங்காரகன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.  நிலப்பிரச்னை கடன் தொல்லை மூட்டுவலி நீங்க இவரை வணங்குவது சிறப்பு. செவ்வாய் தோஷம் நீங்க அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு ஆடை அணிவிப்பார்கள்.

சித்தமிர்த தீர்த்தம்

இத்தல சிவனை சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அந்த அமிர்தம் இங்குள்ள குளத்தில் கலந்திருப்பதால் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது.

ஜடாயு குண்டம்DSCF2365

சம்பாதி ஜடாயு என்ற கழுகு அரசர்கள் வைத்திய நாதரை வழிபாடு செய்து அருள் பெற்றனர். ஜடாயுவின் வேண்டுகோளின்படி ராமர் இங்குள்ள விபூதி குண்டத்தில் சிதை அடுக்கி ஜடாயுவின் உடலை தகனம் செய்ததாக தலவரலாறு சொல்கிறது. இந்த ஜடாயு குண்டம் சிவன் சன்னதி பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எதிரில் உள்ளது.

இந்தக் கோயில் நிறைய பேருக்கு குல தெய்வக்கோயிலாக இருக்கிறது.  என் பிறந்தவீடு புகுந்தவீடு இரண்டுக்குமே இதுவே குலதெய்வக்கோயிலாகும். சமீபத்தில் என் அம்மாவின் 80 வயது சதாபிஷேகத்திற்காக நாங்கள் அனைவரும் இங்கே வந்து கொண்டாடினோம்.

 

இருப்பிடம்  மயிலாடுதுறை  சிதம்பரம் செல்லும் வழியில் 15 கிமீ.

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s