உணவு வகைகளில் உயிர்ச்சத்து பாகம் 4

 

கொழுப்புச் சத்துbutter

வெண்ணெய் மிருகக் கொழுப்புக்கள் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் பருத்தி எண்ணெய் சோயா எண்ணெய் சோள எண்ணெய் போன்றவற்றில் கொழுப்பு சத்து அதிகம்.

நீரில் கரையாத தன்மையாலும் எண்ணெய்ப்பசை போன்ற பிசுக்குகளினால் ஆன தனித்தன்மை பெற்ற கொழுப்பு அமிலத்தையே கொழுப்புச் சத்து என்று கூறுகிறோம். இந்தக் கொழுப்புக்கள் உடலில் சக்தியைக் கொடுக்கின்றன.

ஒரு கிராம் கொழுப்பில் ஒன்பது கலோரி சக்தி கிடைக்கின்றன. கொழுப்பு அமிலங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.  வைட்டமின்கள் ஏ டி ஈ கே போன்றவைகள் இரத்தத்தில் கலக்க உதவுகின்றன. செரிமான நீரின் உற்பத்தியைக் குறைத்து செரிமான வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இரத்த சத்து உடலில் அதிகமாக இருந்தால் கொழுப்பு [ கொலாஸ்ட்ரால் ]

அதிகம் வந்துவிடும். ஊளைச்சதை இரத்தக்கொதிப்பு இதய நோய்கள் வரலாம்.

சாம்பல் சத்துdownload (1)

முருங்கை ராகி கோதுமை நண்டு வெங்காயம் வெண்டைக்காயில் அதிகம் இருக்கின்றன. இரத்தத்தின் அமில காரத்தனமையை கண்காணிப்பது சாம்பல் சத்தாகும். சுண்ணாம்பு சத்து எலும்புகளுடன் சேருவதற்கு சாம்பல் சத்து பெரும்பங்கு வகிக்கின்றது.

உப்புச் சத்துdownload

நீருக்கு அடுத்தபடியாக மனித உடம்புக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது உப்புத்தான். ஆனால் உடலில் அளவோடு உப்பு சத்து இருக்கவேண்டும். உப்பு அதிகமானால் கழுத்துக்கு முன்புறம் வீக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்படும்.

 

Advertisements

One thought on “உணவு வகைகளில் உயிர்ச்சத்து பாகம் 4

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s