உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள் பாகம் 3

 

இரும்புச் சத்து9kon1

முருங்கைக்கீரை  கரிசலாங்கண்ணி கீரை  அவரை வாழைப்பூ  கத்திரிப்பிஞ்சு நாட்டுத்தக்காளி  வெள்ளரிக்காய்  வெண்டைக்காய் பாகற்காயில் இச்சத்து அதிகமாக இருக்கின்றது. இந்தச் சத்து குறைவதால் இரத்தம் கெடும். தோல் நோய் வரும் அடிக்கடி சளி பிடிக்கும். இரத்தசோகை வரும். ஆனால் உடலில் அளவிற்கு மீறி இது இருந்தால் வயிற்றுக்கோளாறு  சிறு நீரகக் கோளாறுகள் வரும்.

மாவுச்சத்து [ சர்க்கரைச் சத்து ]download

தினமும் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை வெல்லம் கிழங்கு வகைகள் வெங்காயம் அரிசி கோதுமை பால் பருப்பு வகைகள் தானியங்களில் இந்தச் சத்து அதிகம் காணப்படுகிறது. நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து கரைந்து போகாமல் தடுக்கவும் பட்டினி இருப்பவர்கள் நோய் வாய் பட்டவர்கள் உடல் நலம் பெறவும் இந்தச் சத்து அவசியமாகிறது.

புரதச் சத்துdownload (1)

சோயா மொச்சை பாதாம்பருப்பு முந்திரி வேர்க்கடலை கொட்டைப்பருப்பு பால் பாலாடை மீன் முட்டை இவைகளில் இந்தச் சத்து அதிகமாக இருக்கிறது.  இந்த வகை உணவினால் ஜீரணிக்கப் பயன்படும் ஜீரண நீர்கள் உடல் வளர்ச்சிக்கும் உடலின் சக்திக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்திக்கும் உகந்தது. புரதச் சத்து குறைவதினால் தசைகள் இளைத்துப்போகும். சத்து குறைபாடு காரணமாக வீக்கம் ஏற்பட்டு உடல் ஊதுகின்றது.

சுண்ணாம்பு சத்துdownload (2)

உடம்பில் தாதுப் பொருட்களில் முக்கியமான ஒரு சத்து சுண்ணாம்பு சத்தாகும். முருங்கை இலை  முருங்கைக்கீரை ராகி  கோதுமை நண்டு ஆட்டிறைச்சி பீட்ரூட் வெங்காயம் வெண்டைக்காய் கேரட்  இவைகளில் மிகுதியாக இருக்கின்றன. நமது உடலில் எலும்புகள் பற்கள் நரம்பு மற்றும் தசைகளின் சரியாக இயக்கத்திற்கும் இரத்தம் உறையவும் சுண்ணாம்பு சத்து தேவைப்படுகின்றது.

Advertisements

One thought on “உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள் பாகம் 3

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s