நியூ[ஸ்]மார்ட்

harpal-singh-kumar_650x400_51451526538_1451541723

இங்கிலாந்தில் உள்ள கேன்சர் ரிசர்ச் யுனைடெட் கிங்டம் அமைப்பின் தலைமை நிர்வாகியும் இந்திய வம்சாவளி பிரிட்டன் ஆய்வாளருமான ஹர்பல்சிங் குமார் என்பவருக்கு அந்த நாட்டு ராணியின் நைட்ஹூட் [ சர் ] பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது  புற்று நோய் தடுப்பு தொடர்பான ஆய்வு மற்றும் நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிதல்  சிகிச்சை முறை போன்றவற்றில் மிக அதிக பங்களிப்பு செலுத்தியமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகை பிடிக்க தடைவிதிக்கவும் முக்கிய காரணமாக இருப்பவர்.1407206173926567

ஸ்விட்சர்லாந்து நாட்டின் சாஃப்ட்வேர் வல்லுனர் மாக்ஸ் ரெனெர் என்பவர் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு மாணவர் குழு உதவியோடு ஒரு பறவை இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் அமர்வதற்குப் பயிற்சி எதுவும் தேவையில்லை. தலைக்கு ஸ்பெஷல் கண்ணாடியுடன் கூடிய ஹெல்மெட் அணிந்து கைகள் இரண்டையும் இறக்கை போன்ற தகடுகளில் பொருத்திக்கொள்ள வேண்டும். கைகள் கால்கள் தலையை அசைத்துக்கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கண்ணாடி வழியே கீழே பார்க்கலாம். காற்றைக் கிழித்துக்கொண்டு பறப்பதுபோல செயற்கையாகக் காற்று செலுத்தப்படும். இதில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே ஒரு பறவையாக உணர ஆரம்பித்துவிடுவோம் என்கிறார் மாக்ஸ்.Neha-Kartik_380

63 காமன்வெல்த் நாடுகளிலிருந்தும் சமூக சேவை மூலம் மற்றவர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்கும் சிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்து அரசு விருது வழங்குகிறது. 2016 ம் ஆண்டுக்கான இளம் தலைவர்கள் விருது இந்தியாவின் கார்த்திக் சானே [21] நேஹா ஸ்வெய்ன் [ 29 ] இருவருக்கும் ஜூன் மாதம் பக்கிங்ஹாம் மாளிகையில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது. கார்த்திக் பார்வையற்றவர். தன்னைப்போல் பார்வையிழந்தவர்கள் அறிவியலைச் சிறந்த முறையில் படிக்க வசதியாக ஸ்ட்ம் அக்சஸ் என்ற முறையைக் கண்டுபிடித்துள்ளார். நேஹா தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ளும் தகுதியை இலவசமாக மாணவர்களுக்கு கற்றுத்தரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர்.images

ரஷ்யாவைச் சேர்ந்த சலவட்ஃபிடாய் என்ற கலைஞர். மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில் உலகிலேயே தலைசிறந்தவர் என பெயரெடுத்தவர். அதுவும் பென்சில் முனையில் இவர் வடிக்கும் சிற்பங்கள் அற்புதமானவை. லென்ஸ் கத்தி இவற்றை வைத்துக்கொண்டு மிகப் பிரபலமான உருவங்களை எல்லாம் செதுக்கி விடுகிறார். இத்தனைக்கும் இவர் ஒரு வழக்கறிஞர்  பென்சில் கிராஃபைட்டில் உருவங்களைச் செதுக்குவது மிகவும் சவாலான் பணி என்பதால் இதை ஆர்வமுடன் செய்து வருகிறாராம்.20151119184700-the-right-cup

சாதாரண தண்ணீரை பழச்சாறு சோடா போன்ற பானங்களின் சுவையோடும் நறுமணத்தோடும் குடிக்கும் வகையில் ஐசாக் லாவி என்பவர் பிளாஸ்டிக் கப்களை நறுமணம் கலந்து உருவாக்கியுள்ளார். பெர்ரி எலுமிச்சை ஆரஞ்சு ஆப்பிள் பேரிக்காய் கோலா போன்ற ஆறு சுவைகளில் கிடைக்கிறது. இதில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கும்போது கப்களில் உள்ள நறுமணம் மூக்கு வழியாக மூளையை அடைவதால் அது சுவையான பானம் என நம்பிவிடுகிறோம். சாதாரண தண்ணீரைச் சுவைக்கிறோம் என்றே தெரியாது. ஒரு கப்பின் ஆயுள்காலம் ஆறு மாதங்கள். சர்க்கரை நோயாளியான லாவிக்கு வெறும் தண்ணீர் குடிப்பது சலிப்பைத் தந்தது. எனவே ஆறு ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த கப்களை தயாரித்து விட்டார். இதனால் உடல் நலத்துக்கும் தீங்கில்லை. இந்த கப் மூலம் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறைந்துவிடும். என்கிறார் லாவி. ஒரு கப் இந்திய மதிப்பில் 2300 ரூபாய்தான்.HEADLINES-JUDGE-Valli-Chettiar-Off

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மானிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வள்ளீயம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி காந்தி அருணாச்சலம் அவர்களை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறியவர். அங்கு கொலம்பியா பல்கலைகழகத்தில் 1992ம் ஆண்டு சட்டக்கல்வியை முடித்து 1995 ம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை தொடங்கினார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றிப்பெற்றவர். தேசிய கனடியன் பார் அசோசியேஷன் மற்றும் அதன் பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் பணியாற்றியதோடு இந்தியா கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும் தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளீன் வர்த்தக உறவை மேம்படச் செய்தவர். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக இருந்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ ஆர் லட்சுமணனின் நெருங்கிய உறவினர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s