கல்வி தெய்வத்தின் பிறந்த நாள்

pondy-hayagreevar-koil-sep2009-15

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆவணி திருவோணத்தன்று தேர்த்திருவிழா நடக்கிறது. கல்வி தெய்வமான இவரை இந்த நாளில் தரிசிக்கலாம்.

ஹயக்ரீவர் அவதாரம்

ஒரு முறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த் திவலைகள் தோன்றி மது  கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளின் பிள்ளைகள் என்ற தைரியத்தில் பிரம்மாவிடமிருந்த வேதங்களை அபகரித்து தாங்களே படைப்புத் தொழில் செய்ய ஆசைப்பட்டனர். தங்கள் முகத்தை குதிரை போல் மாற்றிக்கொண்டு வேதத்தைப் பறித்து பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.prithiyankara-devi-kali-temple_1423725841

வேதங்களை இழந்த பிரம்மா பெருமானைச் சரணடைந்தார். பெருமான் வேதங்களை மீட்க பாதாள உலகம் சென்றார். அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். தானும் குதிரைமுகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டார். குதிரை முகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சி முகர்ந்து புனிதம் ஆக்கினார். ஆவணி ஓணத்தன்று இந்த நிகழ்வு நடந்ததால் ஹயக்ரீவருக்கு இந்த நாள் பிறந்த நாளாக அமைந்தது.

வேதங்களை மீட்டவர் என்பதால் ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வம் சேரும் என்பதால் லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.

சிறப்பம்சம்ST_20150901125840771996

ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும் தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால் பிரிந்த தம்பதிகள் ஒற்றுமையாக வாழ இவருக்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். மேலும் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும் இடது கண்ணால் பெருமாளையும் இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.5February2012-6

மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி  கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய லட்சுமிகுமார தாத்த தேசிகர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து அனுமனை தரிசித்தவர் ஆவார். படிப்பில் முன்னேறவும் பேச்சுத்திறனை வளர்க்கவும் மாணவர்கள் இங்கு வழிபாடு செய்து வரலாம்.sree-raja-rajeswary-temple_1423639646

திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும் செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும் அருகில் இத்தலம் உள்ளதால் மூன்று கோயில்களையும் ஒரே நேரத்தில் தரிசித்து வரலாம்

Advertisements

One thought on “கல்வி தெய்வத்தின் பிறந்த நாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s