கல்வி தரும் கன்னிப்பெண்

Koothanur-Saraswathi-Temple

தல வரலாறு

சத்தியலோகத்தில் இருந்த பிரம்மாவிடம் சரஸ்வதி “ தமது உலகமே கல்விக்கரசியான என்னால்தான் பெருமையடைகிறது “ என்றாள். பதிலுக்கு அவளது கணவர் பிரம்மா ‘ இல்லை இல்லை   நான் செய்யும் படைப்புத்தொழிலால் தான் இந்த உலகத்துக்கு பெருமை ஏற்படுகிறது “ என்றார். குறிப்பிட்டார் இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர். சாபம் காரணமாக பூலோகத்தில் சோழ நாட்டில் இருந்த கூத்தனூரில் புண்ணிய கீர்த்தி சோபனை என்னும் தம்பதிக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும் சிரத்தை என்ற மகளாகவும் பிறந்தனர். அதாவது கணவன் மனைவியாக இருந்தவர்கள் அண்ணன் தங்கையாக பிறக்க நேர்ந்தது. அவர்களுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். அப்போது அவர்களுக்கு தாங்கள் யார் என்ற உண்மை நினைவுக்கு வந்தது. இருவரும் சிவபெருமானை நோக்கி வேண்டினர். அவர்களிடம் சிவன் “ நீங்கள் சகோதர உறவில் பிறந்து விட்டதால் சரஸ்வதி மட்டும் கன்னியாக இங்கேயே வீற்றிருந்து கல்வி செல்வத்தை வழங்கவேண்டும்.” என்று உத்தரவிட்டார். மேலும் “ தம்பதியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இக்கட்டான சூழலுக்கு ஆளாக நேரிடும் என்பதை எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்தினேன்   இதை உலக மக்கள் உணர வேண்டும் “ என்றார். அதன்படி சரஸ்வதி அங்கு தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

பெயர்க்காரணம்ottakoothar

இரண்டாம் ராஜராஜ சோழன் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கிய ஊர் என்பதால் அவரது பெயரால் கூத்தனூர் எனப்படுகிறது. ஒட்டக்கூத்தரே இக்கோவிலைக் கட்டியதாக தலபுராணம் கூறுகிறது. பிரகாரத்தில் வினாயகர்  நாகர்  பிரம்மா பிரம்மபுரீஸ்வரர் பால தண்டாயுதபாணி வீற்றிருக்கின்றனர். ஒட்டக்கூத்தரின் சிலை உள்ளது. சரஸ்வதியின் முன் அன்ன வாகனம் உள்ளதுல்

ஞான பீடம்download - Copy

மூலவர் சரஸ்வதி வெள்ளை ஆடையுடன் வெள்ளைத்தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும் இடக்கையில் புத்தகமும் வலது மேல் கையில் அட்சர மாலையும் இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும்  ஞானச்சஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி இருக்கிறாள். ஞானம் அருள்பவளான சரஸ்வதி இருப்பதால் இத்தலத்திற்கு ஞான பீடம் என்னும் சிறப்பு பெயருண்டு. சரஸ்வதி நதி இத்தலத்தில் அரசிலாறு என்ற பெயரில் ஓடுவதாக ஐதீகம்.

திருவிழாimage - Copy

புரட்டாசி நவராத்திரி சிறப்பாக நடக்கும். அதன்பின் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படும்.

இருப்பிடம்

திருவாரூர்  மயிலாடுதுறை வழியில் 30 கிமீ  தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து பிரியும் ரோட்டில் இரண்டு கிமீ

 

Advertisements

One thought on “கல்வி தரும் கன்னிப்பெண்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s