ஆஹா டிப்ஸ்

images

தினசரி உபயோகிக்கும் குக்கரின் உட்பகுதி கறை படிந்து கருப்பாக இருக்கிறதா? அதைப்போக்க குக்கரில் வைக்கும் தண்ணீரில் சிறிது புளி அல்லது எலுமிச்சையைச் சாறு பிழிந்துவிட்டு அந்த எலுமிச்சை மூடியைப் போட்டு உள்ளே பாத்திரம் வைத்து சமைக்கவும். குக்கரின் உள்ளே உள்ள கறைகள் மறைந்து விடும். சிட் ரிக் ஆசிட் கூட போடலாம். அப்படியே அவ்வப்போது செய்து வந்தால் குக்கர் புதுசு போல் மின்னும்.

உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லும் கட்டைப் பைகளைப் பொருட்களைக் கொடுத்தபிறகு அங்கேயே போட்டுவிடுவோம். மறு முறை போகும்போது பைக்குத் திண்டாட்டமாகிவிடும். ஆகையால் பையின் கட்டைகளைத் தனியாகக் கழற்றிவிட்டுப் பையை மடித்து பைக்குள் வைத்துக்கொண்டு வந்துவிடலாம். வீட்டிற்கு வந்தவுடன் பையில் கட்டையை மாட்டிக்கொள்ளலாம். அடுத்த முறை சிரமம் இருக்காது.ld446

நாம் துணிகளை உலர்ந்தும்போது சில சமயம் காற்றினால் அவை சறுக்கிக்கொண்டே நடுவில் வந்து சேர்ந்துவிடும். இதற்கு க்ளிப் போடும்போது க்ளீப்பை சிறிது சாய்வாக கொடியுடன் கிரிப்பாக இருக்கும்படி போட்டுவிட்டால் துணிகள் சறுக்கி வராது. மேலும் பெரிய துணிகளாக இருந்தால் அவற்றின் கீழ்ப்புறத்தில் இரு நுனிகளையும் சேர்த்து ஒரு க்ளிப் போட்டுவிட்டால் துணிகள் பறந்து மேலே சேராது.879

துணி துவைப்பதற்கு ஊறவைக்கும்பொழுது அதில் சிறிதளவு பொடி உப்பு சேர்த்து ஊறவைத்தால் கலர் துணியின் சாயம் வெள்ளை துணியில் ஒட்டாது. துணியில் ஏதேனும் கறைபட்டிருந்தால் ஒரு சிட்டிகை சமையல் சோடாவும் ஒரு சிட்டிகை பிளீச்சிங் பவுடரும் கலந்து கறைபட்ட இடத்தில் துடைத்து உடனே அலச கறைகள் மறையும்.

Ingefära or as it is known in English, Ginger. I got the idea when a net friend of mine used one picture similar to this one on her web page.

இஞ்சி கெட்டுவிடாமல் இருக்க அதனைக் கழுவி சுத்தப்படுத்தி ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்தால் வெகு நாட்கள் அதன் தன்மை மாறாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள் இஞ்சியை ஒரு ஈரத்துணியில் சுற்றி தண்ணீர் பானையின் மீது வைக்க நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். வெயில் காலமாக இருந்தால் தோல் சீவி மேலே விபூதி பூசி வெய்யிலில் காயவைக்க சுக்காகி விடும்.1bd07bf8-9e70-4299

ரெடிமேட் அல்வா மிக்ஸ் வாங்கி அல்வா செய்யும்போது அதிக அளவு வேண்டும் என்றால் ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து அதனை அல்வா மிக்ஸூடன் கலந்து அல்வா செய்தால் நிறைய அல்வா கிடைப்பதுடன் ருசியும் கூடும். அல்வா கண்ணாடி போன்று பளபளப்பாக இருக்கும்.hqdefault

Advertisements

One thought on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s