பணம் எனக்கு பெரிசில்லே……

Pithapuram-Temple-1901285

பெருமாளின் பக்தரான துக்காராமை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்பினார். அரண்மனை பணியாளர்கள் மூலம் பல்லக்கு குதிரை யானைகளை அவரின் குடிசைக்கு அனுப்பி வைத்தார். பணியாளர்கள் “ சுவாமிஜி தங்களை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்புகிறார். விரும்பிய வாகனத்தில் அரண்மனைக்குப் புறப்பட வசதியாக யானை குதிரை பல்லக்கு எல்லாம் இங்கு வந்திருக்கின்றன. எதில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளுங்கள் “ என்றனர்.1304853496_api

“ எனக்கு வாகனம் எதுவும் தேவையில்லை. கடவுள் கொடுத்த கால்கள் போதும்  நடந்தே வருகிறேன் ஆனால் இப்போது திருமாலுக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறேன்  வர இயலாதே “ என்றார். ‘ தேடி வந்த ராஜ உபசாரத்தை மறுக்கும் இவர் மன்னரின் கோபத்துக்கு ஆளாகப் போகிறார்” என நினைத்த பணியாளர்கள் சிவாஜியிடம் போய் விஷயத்தை சொன்னார்கள். சிவாஜிக்கு கோபம் வரவில்லை. மாறாக துகாராமிற்கு காணிக்கை அளிக்க பை நிறைய பொற்காசுகளுடன் குதிரையில் புறப்பட்டார். “ சுவாமிஜி தவறுக்கு மன்னியுங்கள்  தங்களை தரிசிக்க நான் முதலிலேயே வந்திருக்கவேண்டும் ‘ என்றார்.  “ தவறு செய்தால்தானே மன்னிக்கலாம் “ என்று துகாராம் சிவாஜிக்கு ஆசி அளித்தார். சிவாஜி அவரிடம் “ சுவாமி இந்த காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் ‘ என பொற்காசு பையைக் கொடுத்தார். ‘ பணத்தாசை என்னும் மாயையில் சிக்கினால் பக்தி பயனில்லாமல் போகுமே’ என்ற துகாராம் அதை ஏற்க மறுத்தார். துகாராமின் நிஜ பக்தியை உணர்ந்த சிவாஜி வியப்பில் ஆழ்ந்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s