குக்குடேஸ்வரர்

pithapuram-temple

ஆந்திர மானிலம் கிழக்கு கோதாவரி ஜில்லாவில் இயற்கை எழில் கொஞ்சும் பிட்டாபுரத்தில் உள்ளது குக்குடேஸ்வரர் திருக்கோவில். மகிமை வாய்ந்த 18 சக்தி பீடங்களுள் பத்தாவது பீடமாகவும் பாத கயா தலமாகவும் புகழ்பெற்ற பிட்டாபுரம் புராதன ஆலயங்களுக்குப் பெயர் பெற்ற நகரம்  சக்தியின் உடல் பாகத்தில் பிருஷ்ட பாகம் விழுந்த இடமாதலால் பீடிகாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி பிட்டாபுரம் ஆனதாம்.83_big

கயாசுரன் தன் வலிமையால் யாகங்களின் அவிர்பாகம் தேவர்களைச் சென்றடையாமல் தடுத்து தானே அடைந்தான். இதனால் சக்தியை இழந்த தேவர்கள் மும்மூர்த்திகளைச் சரண் அடைந்தனர். அவர்களுக்காக அம்மூவரும் முனிவர்கள் வடிவில் கயாசுரனிடம் தாங்கள் யாகம் செய்ய இருப்பதாகவும் அதற்குத் தகுந்த இடம் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.  கயாசுரனும் தமது தேசத்தில் யாகம் செய்யும்படி பிரார்த்தித்தான். ஆனால் அவர்களோ பூமி மீது செய்யாமல் கயாசுரன் சரீரத்தின் மீதே தரம் யாகம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தனர். வந்திருப்பது மும்மூர்த்திகளே என்றுணர்ந்த கயாசுரன் அதனை அங்கீகரித்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறினான்.pithapuram_temple_photos_free_download_601014522

ஏழு நாட்கள் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்ற மும்மூர்த்திகளின் நிபந்தனைக்கு சம்மதித்த கயாசுரன் அதற்கு வசதியாக தம் உடலை பெரிதாக வளர்த்து அசையாமல் படுத்தான். மூவரும் கயாசுரனின் நாபியின் மீது யாகத்தைத் தொடங்கினர். ஆனால் ஏழாவது நாள் முடியும் முன்பே நடு இரவில் பரமேஸ்வரன் குக்குடமாக [ சேவல் ] மாறி கொக்கரக்கோ எனக் கூவினார். இதனால் பொழுது விடிந்ததாக நினைத்த கயாசுரன் கண் விழித்துப் பார்த்தான்.  யாகம் முழுமை பெறாததால் அவன் மரணமடைய வேண்டியது நிச்சயம் என முனிவர்கள் கூறினர்.  வந்தது மும்மூர்த்திகள் என்று தாம் முன்பே அறிந்ததாகவும் தமது சரீரம் ஒரு புண்ணியத்தலமாக விளங்கவேண்டும் என்றும் வரம் அளிக்கவேண்டினான். அதனை ஏற்று மஹாவிஷ்ணு தன் பாதத்தான் கயனை சம்ஹரித்தார். கயாசுரனின் சிரம் பீஹாரிலுள்ள கயாவாகவும் பாதம் பிட்டாபுரமாகவும் மாறின. கயாசுரன் முக்தியடைந்த இத்தலத்தில் பிண்ட பிரதானம் செய்தால் பித்ரு தேவதைகள் முக்தி பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை. அதனால் இத்தலம் தக்ஷிண கயா என்று போற்றப்படுகிறது.

கோழியாகக் கூவி சுயம்புவாகத் தோன்றியதால் ஈசனுக்கு இங்கே குக்குடேஸ்வரர் என்ற திரு நாமம்.p80b

இங்குள்ள குளத்தில் நீராடி ஆலயத்தின் நுழைந்ததும் அது பாத கயா க்ஷேத்திரம் என்பதை நினைவூட்டும் விதமாக கயாசுரனின் பாதங்களை தரிசிக்கலாம். குக்குடேஸ்வர சுவாமியின் எதிரில் உள்ள ஏகசிலா நந்தி இத்தலத்தின் சிறப்பு. லேபாட்சி பசவேஸ்வர நந்திக்கு அடுத்த பெரிய  நந்திதேவர் இவர்.Pithapuram-Temple-1901285

சிவபெருமானின் கருவறையிலேயே ஹூங்காரிணி தேவி மாடத்தில் வீற்றிருக்கிறாள். ஹூங்காரன் என்ற அசுரனை அழிக்க அம்பாள் அக்னியிலிருந்து தோன்றியதாக ஐதீகம். ஆனால் அம்மனின் உக்ர பார்வையை பக்தர்களால் நேரடியாகத் தாங்க இயலாது என்பதால் கோயில் வளாகத்தில் ஒரு தனி சன்னதியிலும் புருஹூதிகா தேவியாக பிரதிஷ்டை செய்துள்ளனர். இதே ஆலயத்தில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி தனி சன்னதி கொண்டு சாந்த ரூபிணியாக பூஜைகளை ஏற்கிறாள். மஹா சிவராத்திரியன்று குக்குடேஸ்வர சுவாமி ராஜராஜேஸ்வரி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.

க்ஷேத்ரபாலகரான கால பைரவர் சுப்ரமணிய சுவாமி சித்தி கணபதி கனகதுர்கா நவக்கிரஹங்கள் சண்டீஸ்வரர் காசி அன்னபூரணி காசி விஸ்வேஸ்வரர் ஐயப்பன் சீதா ராமர் ஆதிசங்கரர் ஆகியோர் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ஔதும்பரா விருக்ஷத்தை தொடுவதும் பிரதட்சணம் செய்வதும் இதனடியில் தியானம் செய்வதும் மிகுந்த பலனைத் தரும். இங்குள்ள பாதுகைகள் ஸ்ரீ வல்லபரின் உண்மையான பாதுகைகளாகக் கருதப்படுகின்றன. இங்குதான் ஸ்ரீ வல்லபர் பிறந்ததாகக் கூறப்படுகின்றன.Pithapuram_madhavaswamy

ஆலயத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் குந்தி மாதவப் பெருமாள் சன்னதி உள்ளது. விருத்தாசுரனைக் கொன்றதற்கு பரிகாரமாக இந்திரன் இவரைப் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். பஞ்ச மாதவத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இங்கே பெருமாள் சுயம்புவாக வெளிப்பட்டதாக கூறுவர்.download (2)

குந்தி மாதவப் பெருமாளோடு ராஜலக்ஷ்மி தாயாரும் கோதா தேவியும் கோயில் கொண்டுள்ளனர். வெள்ளீக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு சன்னதி கொண்டுள்ள கோதா தேவிக்கு மார்கழியில் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. மிகப் பழமையான இந்த ஆலயத்தை பக்தர்கள் தவறாமல் தரிசிக்கின்றனர். குந்தி மாதவனை தரிசித்தால்தான் பிட்டாபுர தரிசன பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை

இத்தனை பெருமைகள் உள்ள இந்தத் தலத்தை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி கிடைத்தது. இதைப்பற்றி ஜூலை மாத பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s