ஆஹா தகவல்

zu7122544_main_tm1389386497

ரோமானிய பெண்களிடம் தான் முதன் முதலில் குடைபிடிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் வெளியே செல்லும்போது காற்றினால் கூந்தல் அலங்காரம் கலையாமல் இருக்க சிறு குடைகளைப் பயன்படுத்தினர். முதலில் குடைகள் முரட்டுத்துணிகள் மற்றும் தோல்களால் செய்யப்பட்டன. துணியால் ஆன குடைகளை 16ம் நூற்றாடில் முதலில் பயன்படுத்தியவர்கள் இத்தாலியர். 1850 ம் ஆண்டிற்குப் பிறகு கறுப்புத் துணியாலும் இரும்புக் கம்பிகளாலும் தயாரிக்கப்பட்டன.download (2)

திருவானைக் கோயிலில் அருள்மிகு ஸ்ரீ ஜெம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. இங்கு ஐந்து பிரகாரங்கள் உள்ளன. ஐந்தாவது பிராகாரம் அமைக்கும்போது சிவன் சித்தர் வேடமிட்டு கட்டி முடித்தார். கூலியாக தொழிலாளிக்கு விபூதியை கொடுத்தார். அந்த விபூதி கூலியாளின் கையில் அவர் செய்த வேலைக்கு ஏற்ப பொற்காசுகளாக மாறியதாம்.E_1332909031

கழிவு நீர் ஓடும் பகுதிகளில் சுற்றிலும் தைல மரங்களை [ யூகலிப்ட்ஸ் ] வளர்த்தால் கழிவு நீரை விரைவாக உறிஞ்சி தூய நீராவியாக வெளிவிடும். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் கருதி இம்மரத்தை நடவேண்டும். அதே சமயம் வளமான நிலத்தில் நட்டால் நிலத்தடி நீரையும் சத்துக்களையும் முற்றிலும் உறிஞ்சிவிடும்.image11

அந்தக் காலத்தில் அரசர்களும் காவல் படையினரும் கையில் பெரிய ஆயுதங்களை ஏந்தியவாறு குதிரையில் வேகமாக உலா வருவர். எனவே அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் எதிரில் வரும் நபர் இடது கைப்பக்கமாக கடந்து செல்லும் முறை வழக்கில் வந்தது. இதுவே போக்குவரத்து விதியானது. ஆனால் 1967 வரை மேற்கண்ட விதியை கடைப்பிடித்து வந்த ஸ்வீடன் வலது பக்கம் கடந்து செல்லும் முறையைக் கடைப்பிடிக்கலாயிற்று. தற்போது அமெரிக்காவிலும் [ இடப்பக்கம் ஓட்டும் பழக்கம் உள்ளதால் ] வலது பக்கம் கடந்து செல்லும் முறை அனுசரிக்கப்படுகிறது.download (1)

ஆணுக்கு ஒரு கிலோகிராம் எடைக்கு 76 மில்லி லிட்டர் ரத்தம் உள்ளது. பெண்ணுக்கு ஒரு கிலோகிராம் எடைக்கு 66 மில்லி லிட்டர் ரத்தம் உள்ளது. ஒருவர் 12 சதவிகித ரத்த இழப்பை எவ்வித பாதிப்பும் இன்றி சமாளிக்க முடியும். ரத்த தானம் செய்யும்போது ஏற்படும் ரத்த இழப்பு 8 சதவிகிதம் மட்டுமே  எனவே ரத்த தானம் செய்வது மிகவும்  நல்லது.download

தேனீக்களீன் பாஷையே நடனம் தான். அவை ஒன்றோடு ஒன்று பேச நடனத்தால் சைகை செய்கிறது. ஒரு தேனீக்கூட்டம் பயணிக்கும் தூரம் கற்பனைக்கு எட்டாதது. 90.000 மைல்கள் தூரம் பயணிக்கும்  மூன்று முறை பூமியின் சுழற்சிக்கு சமம். இது ஒரு முறை தேன் எடுக்க 50 முதல் 100 பூக்களை நாடிச்செல்கிறது. மேலும் ஒரு டீஸ்பூன் தேனை சேகரிக்க 12 தேனீக்கள் தங்கள் வாழ் நாளை செலவழிக்கின்றன.products-with-barcodes

நாம் கடைகளீல் வாங்கும் பொருட்களின் கவர்களின் மேல் நீளவடிவில் கறுப்புக்கோடுகளை காணலாம். அவற்றுக்கு பார்கோடுகள் என்று பெயர். இந்த பார்கோடுகளில் பொருட்களின் பெயர் விலை எடை தயாரிக்கப்பட்ட தேதி முதலான விஷயங்கள் உள்ள டங்கி இருக்கும் ஸ்கேனர் மூலம் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பல்பொருள் அங்காடிகளில் விலைப்பட்டியல் துரிதமாகத் தயாரிக்க பார்கோடுகள் உதவுகின்றன. விளையாட்டு அரங்கங்கள்  சினிமா தியேட்டர்கள் போன்றவற்றில் நுழைவுச் சீட்டுகளிலுள்ள பார்கோடுகள் உள்ளே நுழைவதற்கு முன்பு பரிசோதிக்க உதவுகின்றன.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s