முதுமையை விரட்டும் நெல்லி

26-1427349517-1-amla

நெல்லிக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியயித் தரக்கூடியது. முதுமையை விரட்டியடித்து தோல் பளபளப்பைக் கொடுக்கும். உடலிலுள்ள நஞ்சை அகற்றும். பஸ் பயணத்தின்போது நெல்லிக்காய் சாப்பிட வாந்தி ஏற்படாது.  நெல்லி சாதம் நெல்லி இனிப்புப் பச்சடி நெல்லி ரசம் நெல்லி ஜூஸ் நெல்லிக்காய் ஊறுகாய் என்று விதவிதமான ரெஸிப்பிககளை செய்து ருசிக்கலாம்.164233_162050770647599_2051684385_n

பழ வகைகளிலே நெல்லியில்தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தாது உப்பு இரும்புசத்து அதிகமுள்ளது. இதில் உள்ள புரதசத்து இதயத்தை நன்றாக இயங்கச் செய்யும் கார்போஹைடிரேட் நார்ச்சத்து இரும்புச்சத்து கரோடீன் கால்சியம் பாஸ்பரஸ்  பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. நெல்லி இலையைக் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் வாய்ப்புண் போகும். இந்த நீரால் கண்களைக் கழுவ கண் எரிச்சல் நீங்கும். நெல்லிக்காயை இடித்து நீரில் கொதிக்கவைத்து தேன் கலந்து பருகினால் பித்தம் சரியாகும்

Leave a comment