பள்ளிக்கொண்ட ஸ்ரீ ஆஞ்சனேயர்

 

பொதுவாக நின்ற திருக்கோலத்திலும் அமர்ந்த திருக்கோலத்திலும் தரிசனம் தரும் ஸ்ரீ ஆஞ்சனேயர் அபூர்வமாக பள்ளி கொண்ட திருக்கோலத்திலும் எழுதருளியுள்ளார்.p54a

மத்திய பிரதேசம் மானிலம் சிந்துவாடாவில் சாம்வலி என்ற திருத்தலத்தில் பள்ளிகொண்ட அனுமன் கோயில் மலை மீது அமைந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ ஆஞ்சனேயரின் அருகில் கதாயுதம் இருக்க கால் மேல் கால் போட்டுக்கொண்டு காட்சி தருகிறார். அரைக்கண் மூடியிருக்கும் இவர் தூங்காமல் தூங்கும் நிலையில் உள்ளார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீராம் ராவண யுத்தம் மற்றும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் முடித்து வந்து இங்கு ஆஞ்சனேயர் ஓய்வெடுப்பதாக ஐதீகம்.

இதே போல் மஹாராஷ்டிர மானிலம் ஔரங்காபாத் நகரிலிருந்து சுமார் 170 கிமீ தூரத்தில் உள்ள புல்தா மாவட்டத்தின் லோனார் என்ற பகுதியில் ஸ்ரீவராஹர் கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எரி நட்சத்திரப்பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட மண்டபத்தில் தரை மட்டத்தில் சிவபெருமான் லிங்க வடீவில் தரிசனம் தருகிறார்.bhadra-maruti-idol

இந்த மலைக்கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள பாறையில் எட்டடி நீளத்தில் சயனத்திருக்கோலத்தில் அனுமன் எழுந்தருளியுள்ளார். கண்களை நன்றாக மூடிக்கொண்டு நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் காட்சி இது என்று கூறப்படுகிறது. இந்தியாவிலியே உறங்கும் கோலத்தில் அனுமன் இங்குதான் காட்சியளித்தாராம். இவரது கோயிலுக்கு சோபில்லா மாருதி மந்திர் என்று பெயர் பக்தர்கள் இங்கு அமைதியாக வழிபட்டுச் செல்வது வழக்கம்.

சூரிய ஒளிபடரும் கோயில் தூண்கள்

சூரிய பூஜை என கர்பக்கிரகத்தில் சில நாட்கள் இறைவனின் மேல் சூரிய ஒளிபடும் செய்தியை அறிவோம். ஆனால் சூரிய ஒளியால் தூண்கள் சொல்லும் வானவியல் அதிசயமும் உண்டு. கர்னாடக மானிலம் துங்கா நதிக்கரை சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் அருகில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ வித்யா சங்கர் கோயில் கிழக்குப் பார்த்த பிரதானவாயில். உள்ளே ஓர் அழகிய கல்மண்டபம் உள்ளது. அதைத் தாங்கியிருக்கும் பன்னிரெண்டு தூண்களும் கலை நயம் கொண்டவை.

ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியிலிருந்து அந்த மாதம் முடியும் வரை கிழக்கு வாசல் வழியாக காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் முறையாகப் படர்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தூணிலும் சூரியனின் கிரணங்கள் முறையாக விழும் அதிசயத்தைக் காணலாம்.

இதே போல காசி சிருங்கேரி மட ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் பன்னிரெண்டு கல் தூண்களால் ஆன மண்டபம் ஒன்று உள்ளது. சூரியன்  சூரியன் மாதம் தோறும் ஒரு ராசியில் வலம் வரும் இயல்புக்கு ஏற்ப இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள ராசிச்சின்னங்கள் மிக அழகாகக் செதுக்கப்பட்டிருக்கின்றன.

சித்திரை மாதம் என்றால் அதற்குரிய மேஷத்திலும் பங்குனி மாதம் என்றால் அதற்குரிய மீனத்திலும் உதய காலத்தில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் விழுமாறு செதுக்கப்பட்டுள்ளன. தரையில் வட்டமும் கோடுகளும் உள்ளன. இக்கோடுகள் மூலம் நிழல் அப்போது எந்த திசையில் விழுகிறது என்பதை அறிந்து கொள்ளாலாம். இது கிரகங்கள் பற்றி துல்லியமாக ஆராய்ந்து வெளிப்படுத்தும் கருவிகள் இல்லாத காலத்தில் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது அதிசயமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s