தீ  வடிவில் அம்பாள்

jwalamukhi-top-img

பஞ்சாப் மானிலத்தில் உள்ள காங்கரா மாவட்டத்தில் ஜ்வாலாமுகி என்ற ஊர் உள்ளது. இங்குள்ள அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் சிலை இல்லை. பதிலாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தட்சன் யாகம் நடத்தியபோது அதற்கு தன் மருமகன் சிவனை அழைக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்க அவனது மகள் தாட்சாயிணி சென்றாள். ஆனால் அவளை அவன் அவமானப்படுத்தினான். யாகத்தை நிறுத்த தாட்சாயணி வேள்வி குண்டத்தில் குதித்து விட்டாள். உடனே சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகசாலையை அழித்தார். பின் தன் மனைவியின் உடலை தன் மீது போட்டுக்கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவளது ஒவ்வொரு அங்கமும் பூலோகத்தில் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அவை விழுந்த இடங்களில் சக்திகோவில்கள் எழுந்தன. அவையே சக்திபீடங்களாகும். அதில் நாக்கு விழுந்த இடமே ஜ்வாலாமுகி. நாக்கில் இருந்து வெளிப்படும் மோசமான வார்த்தைகள் தீ போல சுடும்jawalamukhi

 

இதையே திருவள்ளூவர்

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு  என்கிறார்.flaming-jwlamukhi

நாக்கு விழுந்த இடம் என்பதால் அதை நெருப்புக்கு ஒப்பிட்டு மூலஸ்தானத்தில் நெருப்பை அம்பாளாக பிரதிஷ்டை செய்துவிட்டனர். இந்த ஜ்வாலைக்கே பூஜை செய்யப்படுகிறது. அக்பர் காலத்தில் வாழ்ந்த அபுல் பாஸல் என்பவர் தன் அயினி அக்பரி என்ற நூலில் இந்தக் கோயிலின் சிறப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் மக்கள் தங்கள் நாக்கையே இந்த அம்பாளுக்கு காணிக்கையாகக் கொடுத்ததாக அந்த நூலில் சொல்லியுள்ளார். இந்தக் கோயில் கோபுரம் தங்கத்தால் ஆனது. கதவுகளுக்கு வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisements

2 thoughts on “தீ  வடிவில் அம்பாள்

 1. வணக்கம்
  அம்மா
  அறியாத தகவல் பகிர்வுக்கு நன்றி
  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. மிகவும் நன்றி ரூபன் உங்கள் அனைவருக்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s