விசித்திரமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்

download (2)

வட ஆப்பிரிக்க நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தன்று நெருப்பு மூட்டி அதை வணங்கிய பின்  நெருப்பைத் தாண்டிச் செல்வர். அப்படித் தாண்டும் போது அவர்கள் செய்த தவறுகள் பாவங்கள் தீக்கிரையாவதாக நம்புகின்றனர்.Monville-lights

ஸ்காட்லாந்து மக்கள் புத்தாண்டு தினத்தின் முதல் நாளின் பிற்பகல் முதல் புத்தாண்டு தினம் முடியும் வரை வீட்டைப்பெருக்கவோ எரியும் விளக்குகளை அணைக்கவோ மாட்டார்கள்.12-grapes-12172476

ஸ்பெயின் மக்கள் புத்தாண்டு பிறக்கும்போது இரவு 12 மணிக்கு கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கி 12 முறை அடித்து முடிப்பதற்குள் 12 திராட்சைப் பழங்களைச் சாப்பிட்டுவிட்டால் அந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகின்றனர்.download (1)

ரோமானியர்கள் புத்தாண்டு மறைந்தவுடன் கருமையான முடி உடைய உயரமான மனிதரைப் பார்த்தால் அந்த வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் என்று நம்புகின்றனர்.images

கொரிய மக்கள் புத்தாண்டு தினத்தன்று குடும்பத்துடன் பட்டம் பறக்க விட்டு மகிழ்வர். பட்டம் வானில் சிறகடித்துப் பறப்பதுபோல் தங்களின் பேரும் புகழும் சிறகடித்துப் பறக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.download

ஜப்பானியர்கள் புத்தாண்டு தினத்தன்று கார்ஃப் என்ற மீனைச் சமைத்து சாப்பிடுவார்கள். அந்த மீன் தண்ணீரிலிருந்து எம்பி வெகு தூரத்திற்கு குதிக்கும். வேகமான சுழல் நீரிலும் இந்த மீன் லாகவமாக நீந்தும். அந்த மீனைப் புத்தாண்டு தினத்தன்று சாப்பிடுவதால் அதன் சக்தி சுறுசுறுப்பு தங்களுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s