புரந்தரதாசர் தூண்

p54c

புரந்தர தாசர் தனது சீடர்கள் அபஸ்வரமாகப் பாடினால் கோபத்தில் அடித்து விடுவாராம். பண்டரி நாதன் அவருக்குப் பாட முடியாதபடி அவரது தொண்டையை அடைக்க வைத்தான். 21  நாட்கள் அழுது முறையிட்டுப் பாடல்கள் எழுதினார். மீண்டும் குரல் வந்தது.p54a

பண்டரிபுரத்தில் ஒரு தாசி மிகவும் அருமையாக சுவாமி மீது பக்திப் பாடல்கள் பாடுவாள். அவளது குரலிலும் பாட்டிலும் மயங்கிய பகவான் புரந்தரதாசர் வேடத்தில் அவள் வீட்டிற்கு சென்றார். தாசி பதறியவளாய் “ சுவாமி என் பாவ கிரகத்திற்கு நீங்கள் வரலாமா? நான் எப்படித் தங்களை உட்கார வைப்பேன்?’ என்றாள். “ நீ சுவாமி மீது அழகாக பாடுகிறாயே அதைக் கேட்கத்தான் வந்தேன் “ என்றார் தாசர் வேடத்திலிருந்த பகவான் அவளும் பக்திப்பூர்வமாகப் பல பாடல்களைப் பாடினாள். பகவான் தன்னிடமிருந்த தங்கக் கங்கணத்தை அவளுக்குப் பரிசளித்தார்.p54d

மறு நாள் காலை பகவானின் ஒரு கையில் கங்கணத்தைக் காணாமல் பக்தர்கள் பதறினார்கள். அதே சமயம் தாசி அந்தக் கங்கணத்தை எல்லோரிடமும் காட்டி “ என் பாட்டுக்கு புரந்தர தாசர் தந்த பரிசு இது ‘ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு அனைவரும் புரந்தர தாசரை ஒரு தூணில் கட்டிப் போட்டு நையப்புடைத்தனர். தாசர் நொந்துபோய் பகவான் மீது பாட்டுக்கள் நிறைய பாடினார். பகவான் அசரீரியாக “ தாசரை அடிக்கவேண்டாம் அவரை விடுவித்து மன்னிப்பு கேளுங்கள். நான் தான் விளையாடினேன். தாசரை அடித்ததால் எனக்கு நிறையப்  பாட்டு கிடைத்ததே போதும். தாசரைக் கட்டி வைத்த தூணுக்கு இன்று முதல் பூஜை செய்யுங்கள்” என்றார்.

பகவான் சொன்னபடியே தாசரைக் கட்டி வைத்த தூணுக்கு பண்டரிபுரத்தில் இன்றும் வழிபாடு நடக்கிறது.

Advertisements

One thought on “புரந்தரதாசர் தூண்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s