ஆஹா தகவல்

images (1)

இரண்டாவது உலகப்போரில் நார்வே நாட்டுக்கு இங்கிலாந்து உதவியது. அதற்கு நன்றி கூறும் விதமாக நார்வே அரசு ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை இங்கிலாந்துக்கு அளிக்கிறது. இன்றும் அவ்வழக்கம் தொடர்கிறது.can-stock-photo_csp5174411

இத்தாலி நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு ராஜ மரியாதை நடக்கிறது. இயேசு நாதர் மாட்டுக்கொட்டகையில் பிறந்தபோது அருலிருந்த ஒரு பசு குழந்தை குளிரில் சிரமப்படாமலிருக்க அதை  நெருங்கி பெருமூச்சுவிட்டு உஷ்ணம் கொடுத்ததாம். இதற்கு நன்றி செலுத்தும் விதமாகவே கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது.download (1)

கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆரம்ப நாள் பெயர் ஃபீஸ்ட் ஆஃப் லைட் என்பதாகும்400px-Christmas-island-map

இந்தியப் பெருங்கடலில் 1643 டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ்காரார் ஒரு தீவைக் கண்டுபிடித்தார். அதனால் அது கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர் பெற்றது.cf6e4_Christmas

 

எகிப்தில் கிறிஸ்துமஸ் ஜனவரி 7 ம் தேதி கொன்டாடப்படுகிறது. பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.download

நார்வேயில் கிறிஸ்துமஸூக்கு முந்தைய நாளில் துடைப்பங்களை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்து விடுவார்கள். இதற்குக் காரணம் சூனியக்காரிகள் வந்து அவற்றைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற பயம்தான்.german-

இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரத்துக்குப் பதிலாக மரப்பிரமீடுகளில் பழங்களால் அலங்கரிக்கும் வழக்கம் உள்ளது. இவர்கள் ஒரு பையில் நண்பர்களுக்குக் காய்ந்த பருப்பு வகைகளைப் போட்டு தருகிறார்கள். இதன் மூலம் எளிமையைப் பறைசாற்றுகிறார்கள்.images

உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் அன்று சிலந்தி வலையைக் கண்டால் அதிர்ஷ்டம் வரும் என்று நம்புகிறார்கள்.kg

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் இரவு உணவுக்குப் பின் கிரிகெட் ஆடுவது வழக்கம்.lalibela-sunday-mass03

 

எத்தியோப்பியாவில் சுமார் 3 மணி நேரம் நடைபெறும் திருப்பலி முழுவதும் நின்று கொண்டுதானிருக்கவேண்டும்.

 

பதிவுலக அன்பர்களுக்கு  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s