ஆஞ்சனேயர் பெருமை

52b5b84a-

தந்தை கேசரிக்கும் தாய் அஞ்சனைக்கும் நேசத்துக்குரிய மைந்தராக தோன்றிய காரணத்தால் ஆஞ்சனேயர் என்ற பெயர் பெற்றார். வாயுவாகிய காற்றுக்கு மாருதம் என்று பெயர். மெல்லிய இனிமையான காற்றுக்கு மந்த மாருதம் என்றும் வலிய சூறைக்காற்றுக்கு கண்ட மாருதம் என்றும் பெயர். ஆதலால் மாருதம் எனப்படும் காற்றுக்குரிய வாயுதேவனின் மைந்தனாகிய ஆஞ்சனேயர் மாருதி என்று அழைக்கப்படுகிறார்.Kondagattu-Hanuman-Temple-exploretelangana7

கரீம் நகரிலிருந்து 35 கிமீ தூரத்தில் கொண்டஹட்டு ஹனுமான் என்ற கோவில் உள்ளது. கரீம் நகரில் உள்ள இன்னொரு பிரசித்தி கோயில் வேமுலவாடா என்ற சிவன் கோவில். அதிலிருந்து இந்த அனுமன் கோவில் 30 கிமீ தூரத்தில் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு வரும் திரயோதசி அன்று இங்கு மிக விமரிசையாக அனுமன் பூஜை நடைபெறும்   ஆந்திராவின் பல மூலைகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு இன்று ஒன்று கூடுவார்கள். இங்கு குழந்தைவரம் வேண்டி ஒரு பெண் 41 நாட்கள் பூஜை செய்தால் மழலைச் செல்வம் தவறாமல் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கை.ef2d6-hanumanji-heart-15-05-10-500x675

ஆஞ்சனேயருக்கு சிறிய திருவட் என்ற பெயரும் உண்டு. திருமலை தன் தோள்களின் மேல் என்றும் சுமக்கும் பேற்றினை பெற்றவர் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடன் இராமாவதாரத்தில் அதே பேற்றை பெற்ற அனுமனுக்கு சிறிய திருவடி என்று பெயர். அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்று பண்புகளும் தூதுவர்களுக்கு வேண்டிய குணங்கள். இக்குணங்கள் நிறையப் பெற்ற ஆஞ்சனேயர் இராம தூதனாக பெயர் பெற்றார்.

அனுமனுக்கு சாத்தப்படும் மாலைகள்

வடை மாலைAnjaneya-1

அனுமனுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாக ஆரோக்கியமாக இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்லது. ஆதலால் நாமும் ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்தி வணங்குதல் நல்லது.

வெற்றிலை மாலைhanuman betal leaf

சீதையைத் தேடி அனுமன் பல இடங்களில் அலைந்து கடைசியில் அசோகவனத்தில் சந்தித்தார். அப்போது சீதா தேவி அங்குள்ள வெற்றிலையை எடுத்து சிரஞ்சீவியாக இருக்க அனுமனை வாழ்த்தினாராம். ஆதலால் அனுமனுக்குப் பிடித்த மாலை வெற்றிலை மாலை.

வெண்ணெய்க் காப்புhanuman3ராம் ராவண யுத்தத்தின் பொழுது ராமரையும் இலக்குவனையும் தன் தோளில் சுமந்து சென்றார். அப்போது இராவணன் விடாமல் சரமாரியாக அனுமனின் மேல் அம்பு தொடுத்தான். அம்பு பட்ட காயம் ஆறுவதற்கக அனுமன் தன் உடம்பு முழுவதும் வெண்ணெய் தடவிக்கொண்டாராம்  வெண்ணெய் சீக்கிரம் உருகும் தன்மை கொண்டது. ஆஞ்சனேயரிடம் நாம் பிரார்த்தித்தால் நம் கஷ்டங்கள் வெண்ணெயைப் போல் சில நிமிடங்களில் உருகி விடும் என்பது ஐதீகம்.

ராம நாம மாலைhanuman-story1அனுமன் தன் இதயத்தில் ராமனை வைத்திருக்கிறார். ராம நாமம் நமக்கு எல்லா நன்மைகளையும் தரும். அனுமனுக்கு மிகவும் பிடித்த ராம நாமத்தை எழுதி மாலையாகப் போட்டால் அனுமனின் நேயத்தைப் பெறலாம்.

வாலில் பொட்டு வைப்பது368265631_d2beb8bfbd

அனுமனுக்கு சக்தி வாலில்தான். இராவணன் சபையில் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவணனுக்கும் மேலே உயரமாக அமர்ந்தவர் அனுமன். அவர் இலங்கையை அழித்ததும் வாலில் உள்ள நெருப்பினால்தான். அதனால்தான் அனுமனின் வாலில் குங்குமப்போட்டு வைத்து வழிபடுகிறோம். சகல நன்மைகளும் உண்டாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s